9 பல்கலைக்கழக துணை வேந்தர்களை தீபாவளி அன்று காலை 11.30 மணிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் கெடு விதித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளுநரின் கருத்தை மதிக்க வேண்டாம் என கேரள அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள ஆளுநர் கெடு
கேரளாவில் மீண்டும் ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையேயான மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கேரளாவில் 9 பல்கலைக்கழக துணை வேந்தர்களை இன்று காலை 11.30 மணிக்குள் ராஜினாமா செய்யுமாறு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் வலியுறுத்தியுள்ளார். கடந்த 21 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டி காட்டி அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
Upholding the verdict of Hon'ble SupremeCourt dt 21.10.22 in Civil Appeal Nos.7634-7635 of 2022(@ SLP(c)Nos.21108-21109 of 2021) Hon'ble Governor Shri Arif Mohammed Khan has directed Vice Chancellors of 9 varsities in Kerala(see image) to tender resignation: PRO,KeralaRajBhavan pic.twitter.com/tsT5tQ9NJr
— Kerala Governor (@KeralaGovernor)
பதிலடி கொடுக்கும் கேரள அரசு
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இன்னொரு புறம் ஆளுநரின் நகர்வுகளை எதிர்த்து போராட்டம் நடத்த ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இப்படி மாநில அரசுக்கும் கேரள ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்ச தொட்டு வருவது, கேரள அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, அனைத்து துணை வேந்தர்களும் ஆளுநரின் உத்தரவை மதிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை அமைப்பது யார்? பாஜக Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - முந்துவது யார் ?