பிரதமர் மோடி நாளை பந்திபூரில் சர்வதேச வனவிலங்குகள் சிறப்பு சரணாலயத்தை திறந்து வைக்கிறார்!!

By Dhanalakshmi G  |  First Published Apr 8, 2023, 11:54 AM IST

ஆசியாவில் விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு உலகளாவிய தலைவர்களின் கூட்டணிக்கு பிரதமர் மோடி  2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அழைப்பு விடுத்து இருந்தார். சுற்றுச்சூழலுக்கு மோடி அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவற்றுக்கு வன விலங்குகள் சாதமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.  


2014 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புலிகளின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 2226 -ல் இருந்து 2018 ஆம் ஆண்டில் 2967 ஆக, அதாவது 33% அதிகரித்துள்ளது. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையின் சமீபத்திய புள்ளி விவரங்களை ஏப்ரல் 9 ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வலுவான பாதுகாப்பு மேலாண்மை காரணமாக குஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது. இதுவே 2015 ஆம் ஆண்டில் 523 ஆகவும், 2020 ஆம் ஆண்டில் 674 ஆகவும் இருந்தது.
 
பரவலாக விநியோகிக்கப்பட்ட சிறுத்தைகளின் எண்ணிக்கை சுமார் 63% ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 2014 ஆம் ஆண்டில் 7,910 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 12,852 ஆக அதிகரித்துள்ளது.

நாளை பந்திபூரில் துவங்க இருக்கும் சர்வதேச வனவிலங்குகள் கூட்டமைப்பு என்ற பெயரிலான இந்த சரணாலயத்தில் உலகின் ஏழு வனவிலங்குகளான புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பபியுமா, ஜாகுவார் மற்றும் சீட்டா ஆகியவை பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM will also launch the International Big Cats Alliance () during the event. pic.twitter.com/Y8JX65l3LS

— DD News (@DDNewslive)

Tap to resize

Latest Videos

 WATCH: உ.பி.யில் தேசியக் கொடியை வைத்து பழங்களை சுத்தம் செய்யும் நபர்!
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால், 2022 ஆம் ஆண்டில் சீட்டா முதன் முறையாக உலகின் ஒரு காட்டுப் பகுதியிலிருந்து மற்றொரு வனப்பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால், சீட்டா இனம் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டது என்ற வரலாறும் பதியப்பட்டது. இதற்குக் காரணம் பிரதமர் மோடியின் முழு முயற்சிதான். பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் வனவிலங்கு மற்றும் மக்களுக்கு இடையே சாதகமான சூழல் ஏற்படுத்த முடியும் என்பது அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும். இதன் முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் கடந்த ஆண்டு அசாமில் காண்டாமிருகத்தை வேட்டையாடுவது முடிவுக்கு வந்தது. 

சிறுத்தை:இந்தியாவில் 12,000 முதல் 14,000 சிறுத்தைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆசியாவில் இவை மரபணு ரீதியாக வேறுபட்டது. 

பனிச்சிறுத்தை:பனிச்சிறுத்தை மத்திய மற்றும் தெற்காசியாவின் மலைத்தொடர்களில் உள்ளன. இந்தியாவில், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கிழக்கு இமயமலையில் உள்ள சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மேற்கு இமயமலையின் பெரும்பகுதியை உள்ளடக்கி உள்ளது. 2021 ஆம் ஆண்டில், உலகில் சுமார் 7,500 பனிச்சிறுத்தைகள் இருந்தன. அவற்றில் 500 இந்தியாவில் இருந்தன.

சீட்டா:
இந்தியாவில் 1952 முதல் சீட்டா அழிந்து விட்டது. 2022 செப்டம்பரில், நமீபியாவிலிருந்து 8 சீட்டாக்கள் இறக்குமதி செய்யப்பட்டதால், இந்திய காடுகளில் சீட்டாக்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை நவம்பர் 2022 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டன. இந்த சீட்டாக்கள் தற்போது நன்றாக வளர்ந்து சுற்றுச்சூழலை ஏற்றுக் கொண்டதுடன், குட்டிகளையும் ஈன்றுள்ளது.

இந்தியாவில் தவறான தகவல் இல்லாத இணையத்தை உருவாக்குவதே நோக்கம்: சீதாராம் யெச்சூரிக்கு ராஜீவ் சந்திரசேகர் பதில்!!

click me!