Vande Bharat Express Train: 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தொடக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

By Pothy RajFirst Published Oct 12, 2022, 2:39 PM IST
Highlights

டெல்லி- இமாச்சலப்பிரதேசம் இடையிலான நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி நாளை(13ம்தேதி) தொடங்கி வைக்க உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி- இமாச்சலப்பிரதேசம் இடையிலான நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி நாளை(13ம்தேதி) தொடங்கி வைக்க உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் 3வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காந்திநகர்-மும்பை இடையே கடந்த மாதம் 30ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இ்ந்நிலையில் அடுத்த 12 நாட்களில் 4வது ரயில் சேவை தொடங்கப்படுகிறது

அடுத்த ஆண்டு பட்ஜெட் எப்படி இருக்கும்? நிர்மலா சீதாராமன் சூசகம்

4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியிலிருந்து புறப்பட்டு, இமாச்சலப் பிரதேச மாநிலம், உனா மாவட்டம் சென்றடையும். புதன்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களும் இந்த ரயில்சேவை இருக்கும். அம்பாலா, சண்டிகர், அனந்த்பூர், சாஹிப், உனா ஆகிய இடங்களில் வந்தேபாரத் ரயில் கடந்து செல்லும். 
இமாச்சலப்பிரதேசத்தில் இந்த ஆண்டு கடைசியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி முதல் அம் அனதுரா வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு அம் அனதுரா ரயில் நிலையத்துக்கு காலை 11.05 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 1 மணிக்குப்புறப்பட்டு, டெல்லியை மாலை 6.25 மணிக்கு வந்தடையும்.

‘முதலில் எருமை, அடுத்து மாடு.. இப்போ அதுவும் போச்சா.! அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரயில்’

இந்த ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 4 மாநிலங்களை கடந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவை 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனது வர்த்தக சேவையை கடந்த 1ம் தேதி தொடங்கியுள்ளது. இதில் ஒருமுறை எருமை மாட்டின் மீது மோதி வந்தேபாரத் ரயில் விபத்துக்குள்ளானது. ரயிலின் முன்பகுதி சேதமடைந்ததைத் தொடர்ந்து புதிய பகுதி மாற்றப்பட்டது. 

2வது முறையாக எருமை மாடுகள் மீது மோதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்.. அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் !

4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாளை தொடங்கப்படும் என்றாலும், வர்த்தக ரீதியான சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்து ரயில்வே துறை அறிவிக்கவில்லை. இதுவரை டெல்லி-வாரணாசி, டெல்லி-கத்ரா, காந்திநகர்-மும்பை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது குறிப்பபிடத்தக்கது

click me!