அரசியலுக்கு வந்து வெறும் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் கேள்விக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது, முக்கியத்துவம் தரமுடியாது என்று பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விளாசியுள்ளார்.
அரசியலுக்கு வந்து வெறும் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் கேள்விக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது, முக்கியத்துவம் தரமுடியாது என்று பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விளாசியுள்ளார்.
பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஆட்சியைப் பிடித்த ஜக்கிய ஜனதா தளம் கட்சி, கூட்டணியல் ஏற்பட்ட கசப்பால், பின்னர் பாஜகவுடன் சேர்ந்தது.
கையைப் பிசையும் கர்நாடகா! லம்பி வைரஸால் கால்நடைகளுக்கு பாதிப்பு அதிகரிப்பு! வியாபாரமும் காலி
கடந்த தேர்தலிலும் பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். ஆனால், திடீரென ஏற்பட்ட அதிருப்தியால் ஆட்சி பாஜக கூட்டணியிலிருந்து விலகி, மீண்டும் ஆர்ஜேடி, காங்கிரஸுடன் இணைந்து நிதிஷ் குமார் ஆட்சியைப் பிடித்தார்.
இது பாஜகவுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது, பீகாரில் ஆட்சியையும் பாஜக பறிகொடுக்க நேர்ந்தது. இதனால் பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.
சோசலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயன் சொந்த கிராமமான சிதாப் தியாராவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் சென்றிருந்தார். அங்கு அவர் பேசுகையில் “ சோசலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷின் கொள்கைகள் அதிகாரத்துக்காக காங்கிரஸிடம் அடகுவைக்கப்பட்டன” என விமர்சித்திருந்தார்.
இது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலில் “ நீங்கள் யார் பேசியது குறித்து கேட்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் கேட்கிறேன்,ஜெயப்பிரகாஷ் நாராயன் எதற்காகப் போராடினார், எதற்கு ஆதராவாக இருந்தார் என்பது அவருக்கு தெரியுமா, புரிதல் இருக்கா. நாங்கள் ஜேபி இயக்கத்தில் இருந்து வளர்ந்தவர்கள், ஊக்கம் பெற்றவர்கள். வெறும் 20 ஆண்டுகளுக்கு முன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது, முக்கியத்துவமும் தரமுடியாது.
இப்போது அவர்களிடம் அதிகாரம் இருக்கலாம், அனைத்து ஊடகங்களும் அவர்களைப் பற்றி பேசலாம். என்னைப்பற்றி அவர்கள் பேசுவதை அனைத்து ஆங்கில ஊடகங்களும் செய்திவெளியிடலாம். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்டவில்லை.
இன்ஃபோசிஸ் தலைவர் திடீர் ராஜினாமா... பெரும் இழப்பு என நிறுவன இயக்குநர் குழு கருத்து!!
பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் என்னைப் பற்றி விமர்சித்துள்ளார், மகாகட்பந்தன் அரசு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். நான் கேட்கிறேன், யார் அவர், அவர் பேசுவதற்கு பதில் அளிக்க முடியாது. அவரிடம் சென்று, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி எத்தனை நாட்கள் ஆகின என்று ஏன் நிருபர்கள் கேள்வி கேட்கக்கூடாது” எனத் தெரிவித்தார்