maiden pharmaceuticals: மெய்டன் மருந்து நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்த ஹரியானா அரசு உத்தரவு

By Pothy Raj  |  First Published Oct 12, 2022, 10:32 AM IST

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளை பலி கொண்ட 4 இருமல் மருந்துகளை தயாரித்த மெய்டன் மருந்து நிறுவனம் உற்பத்தியை நிறுத்த ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதற்காக விளக்கம் கேட்டு, ஹரியானா மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளை பலி கொண்ட 4 இருமல் மருந்துகளை தயாரித்த மெய்டன் மருந்து நிறுவனம் உற்பத்தியை நிறுத்த ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதற்காக விளக்கம் கேட்டு, ஹரியானா மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

உலக சுகாதார அமைப்பு சமீபத்திய அறிக்கையில் இந்தியாவில் ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் மருந்துநிறுவனத்தால் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளான ப்ரோமெதாஜைன் ஓரல் சொலுஷன், கோபெக்ஸ்மாலின் பேபி காப் சிரப், மேக்ஆப் பேபி காப் சிரப் மற்றும் மார்ஜின் என்கோல்ட் சிரப் ஆகியவை மோசமான தரத்தில் உள்ளன.

Tap to resize

Latest Videos

அடுத்த ஆண்டு பட்ஜெட் எப்படி இருக்கும்? நிர்மலா சீதாராமன் சூசகம்

இந்த மோசமான தரத்தில் உள்ள மருந்துகள் காம்பியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தைப் பயன்படுத்தியதால், 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், ஏராளமான குழந்தைகளுக்கு சிறுநீரகம் தொடர்பான சிக்கல்கள் எழுந்துள்ளது என எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, காம்பியா நாட்டில் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமாக மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்துகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்கம் அனுப்பியுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தும் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை, ஏற்றுமதி மட்டுமே செய்யப்பட்டுள்ள என விளக்கம் அளித்துள்ளது.

அரசியல் கத்துக்குட்டிகெல்லாம் பதில் அளிக்க முடியாது! அமித் ஷாவை விளாசிய நிதிஷ் குமார்

இந்த சூழலில் மருந்துத் தரக்கட்டுப்பாடு  விதிகளை மீறியது தொடர்பாக மெய்டன் மருந்து நிறுவனம் விளக்கம் அளிக்க ஹரியானா மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில் “ சோனிபட் நகரில் உள்ள மெய்டன் மருந்து நிறுவனத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 12விதமான விதிகளை மருந்து நிறுவனம் மீறியுள்ளது.இதனால் உற்பத்தியை நிறுத்த ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

கேரளாவில் நரபலி புதிதல்ல! 30 ஆண்டுகளுக்குமுன் பணக்காரராக மகளை கொலை செய்த மருத்துவர்

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, மெய்டன் நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் ஜலதோஷத்துக்கான மருந்துகளில் டைத்தலின் கிளைகோல், அல்லது எத்திலின் க்ளைகோல் மருந்துகள் கெட்டு, விஷத்தன்மையுடையதாக மாறியதால், ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளன எனத் தெரிவித்துள்ளது.

முதல்கட்ட விசாரணையில் ஹரியாணா மாநிலம் சோனிபேட்டையில் நடத்தப்படும் மெய்டன் பார்மாசூட்டிகல் நிறுவனம், மாநில மருந்துக் கட்டுப்பாட்டு மற்றும் உற்பத்தி ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்றுள்ளது. காம்பியா நாட்டுக்கு மட்டும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றுள்ளது.

click me!