ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் பாரத் ஜோடோ நடைபயணத்தின்போது, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அவருடன் போட்டிபோட்டு தண்டால் பயிற்சி எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் பாரத் ஜோடோ நடைபயணத்தின்போது, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அவருடன் போட்டிபோட்டு தண்டால் பயிற்சி எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணத்தை கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். காஷ்மீர் வரை செல்லும் இந்த நடைபயணத்தில் ராகுல் காந்தி 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களைக் கடந்து 3,500கி.மீ தொலைவுக்கும் அதிகமாக நடக்க உள்ளார்.
undefined
தமிழகத்தைக் கடந்து, கேரள மாநிலத்தில் 18 நாட்களுக்கும் மேலாகச் சென்று தற்போது ராகுல் காந்தி நடைபயணம் கர்நாடக மாநிலத்துக்குள் சென்று ஏறக்குறைய 34 நாட்களை எட்டியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடைபயணம் சென்றுவரும் ராகுல் காந்திக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சாலையின் இரு புறங்களிலும் நின்று மக்கள் ராகுல் காந்தியை வரவேற்று வருகிறார்கள்.
இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி தொடர்பான ஏராளமான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அதில் முக்கியமானது, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 75 வயது காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையுடன் சேர்ந்து, ராகுல் காந்தி, சாலையில் ஓடும் காட்சி பெருத்த வரவேற்பைப் பெற்றது.
கேரள மாநிலத்தில் ராகுல் காந்தி குழந்தைகளை தூக்கி வைத்து கொஞ்சும் காட்சி, இளைஞர்களுடன் பேசும் காட்சி, ராகுல் காந்தியை பார்த்து கண்ணீர் விட்டு அழும் இளம் பெண் போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின.
கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தியுடன் பங்கேற்றார். அப்போது தனது தாய் சோனியா காந்தி காலில் அணிந்திருந்த ஷூவின் கயிற்றை ராகுல் காந்தி கட்டிவிட்ட காட்சி தொடர்பான வீடியோ, புகைப்படமும் வைரலானது.
Push-Up Challenge! pic.twitter.com/SokyTW09uM
— Congress (@INCIndia)இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் மற்றும் சிறுவன் ஆகியோர் சேர்ந்து ராகுல் காந்தியுடன் போட்டிபோட்டு சாலையில் நேற்று தண்டால் எடுத்தனர். இந்த வீடியோவும், புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
The one full and two half pushups!
🙂😀😃😄😁😇 pic.twitter.com/y3C9ucNOU4
இதில் டிகே சிவக்குமார், வேணுகோபால், ஒரு சிறுவன் ஆகியோர் தண்டால் எடுத்தாலும், ராகுல் காந்திதான் முறைப்படி சரியான முறையில் தண்டால் எடுத்தார். இந்தப் புகைப்படத்தை காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் “ ஒரு முழுமையான புஷ்அப், மற்ற இரண்டும் அரை புஷ்அப்” என்று கிண்டலாக சுர்ஜேவாலா பதிவிட்டுள்ளார்.