இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர் ரவிக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர் ரவிக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அணு விஞ்ஞானியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரவிக்குமார், 2002 இல் இன்ஃபோசிஸில் சேர்ந்தார். 2016 இல் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில், அவர் துணை சிஓஓவாகப் பெயரிடப்பட்டார். நிறுவனத்தின் சிஓஓவாக பரவலாகக் கருதப்பட்டார். ஆனால் இன்ஃபோசிஸ் பின்னர் தற்போதைய யுபி பிரவின் ராவ் ஓய்வு பெற்ற பிறகு சிஓஓ பதவியை நீக்கியது.
இதையும் படிங்க: வயிற்று வலிக்கு ஸ்கேன் எடுக்க போன பெண்.. ரிப்போர்ட் பார்த்த டாக்டருக்கு அதிர்ச்சி - அச்சச்சோ.!
இன்ஃபோசிஸின் 2021-22 ஆண்டு அறிக்கையின்படி, தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் மற்றும் முன்னாள் சிஓஓ யுபி பிரவின் ராவ் ஆகியோருக்குப் பிறகு ரசிக்குமார் நிறுவனத்தின் மூன்றாவது அதிக சம்பளம் பெறும் மூத்த நிர்வாகியாக திகழ்ந்தார். நிறுவனத்தின் அனைத்து தொழில் பிரிவுகளிலும் தலைவராக ரவிக்குமார் வழிநடத்தினார்.
இதையும் படிங்க: ரூ.850 கோடி மதிப்பிலான மகா காளேஸ்வரர் சிவன் கோவில்… நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!
ஆலோசனை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பொறியியல் மற்றும் சிறப்பு டிஜிட்டல் விற்பனைகளை அவர் வழிநடத்தினார். அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் ரவி குமார், இன்ஃபோசிஸில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் பணியாற்றிய நிலையில் நிலையில் ரவிக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவு அறிவிப்புக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.