கேரளாவையே உலுக்கி எடுத்துவரும் நரபலி விவகாரம் முதல்முறையாக அங்கு நடக்கவில்லை, கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பே பணக்காரராக பெற்ற மகளையே சித்ரவதை செய்து கொலை செய்த மருத்துவர் போலீஸிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவையே உலுக்கி எடுத்துவரும் நரபலி விவகாரம் முதல்முறையாக அங்கு நடக்கவில்லை, கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பே பணக்காரராக பெற்ற மகளையே சித்ரவதை செய்து கொலை செய்த மருத்துவர் போலீஸிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவம் கடந்த 1997ம் ஆண்டு நடந்தது.
இளந்தூரில் உள்ள கன்னியம்கண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சசிராஜா பனிக்கர். இவர் ஆயுர்வேத மருத்துவர். முதல் மனைவியைப் பிரிந்த பின் 2வதாக திருமணம் செய்து கொண்டார். சசிராஜா பனிக்கர் முதல் மனைவிக்கு ஒரு குழந்தை இருந்தது. சசிராஜா பனிக்கருக்கு குறுக்குவழியில் பணக்காரராகும் ஆசை இருந்தது.
சேர்தலாவில் இருந்து ஒரு இளம் பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துவரும் சசிராஜா பனிக்கர், தனது மனைவியிடம், இளம் பெண்ணுக்கு மந்திரசக்திகள் தெரியும் என்று கூறி மிரட்டினார்ர். இருவரும் வீட்டுக்கு வந்த பின், மனைவியை வெளியே அனுப்பிவிட்டு பூஜை அறைக்கு சென்று விடுவார்கள்
பூஜை அறையில் தனது 4வயது மகளை சிகரெட் துண்டுகளால் சுட்டு பனிக்கர் கொடுமைப்படுத்தியுள்ளார். இதை வெளியே சொல்லாமல் குழந்தையின் தாயும் மறைத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் குழந்தைக்கு சிகரெட் துண்டுகளால் சுட்டு காயத்தால் உயிரிழந்தது. இந்த விவகாரத்தை அக்கம்பக்கத்தினர் போலீஸாரிடம் தெரிவித்ததையடுத்து, ஆரன்முலா போலீஸார் விசாரணை நடத்தினர்.
கேரளாவில் நரபலி அதிர்ச்சி!கழுத்தை அறுத்து 2 பெண்கள் படுகொலை : பெண் உள்பட 3 பேர் கைது
விசாரணையில் பணக்காரராகும் ஆசையில் குழந்தையை கொடுமைப்படுத்தி பனிக்கர் கொலை செய்தது தெரியவந்தது. அப்போது பத்தினம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சசிரேகா இருந்தார். அவர் தலைமையில் பனிக்கரிடம் தீவிர விசாரணை நடந்து குற்றம் நிரூபிக்கப்பட்டது.
பனிக்கரின் முதல்மனைவியின் வாக்குமூலம்தான் திருப்புமுனையாக அமைந்தது. இந்த விவகாரத்தில் சசிராஜா பனிக்கர், அவரின் மனைவி, காதலி ஆகிய 3பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சசிராஜா பனிக்கருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு குறைவான சிறை தண்டனை வழங்கப்பட்டநிலையில் அவர்கள் தண்டனைக் காலம் முடிந்தபின் விடுதலையாகினர். ஆனால்,திருவனந்தபுரம் சிறையில் இருந்த பனிக்கர் அங்கு உயிரிழந்தார்