சித்ரதுர்காவில் பிரதமர் மோடிக்காக தயாரான நிலக்கடலை மாலை!

Published : May 02, 2023, 10:08 AM ISTUpdated : May 02, 2023, 11:03 AM IST
சித்ரதுர்காவில் பிரதமர் மோடிக்காக தயாரான நிலக்கடலை மாலை!

சுருக்கம்

கர்நாடகாவின் சித்ரதுர்காவுக்கு வரும் பிரதமர் மோடிக்கு அணிவிப்பதற்காக நிலக்கடலையைக் கொண்டு மாலை தயாரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று சித்ரதுர்கா மற்றும் விஜய்நகர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்பதற்காக, நிலக்கடலையால் பிரம்மாண்டமான மாலையும் கிரீடமும் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடிக்கு அவரது தாயார் நெற்றியில் பொட்டி வைப்பது போன்ற கிரியேட்டிவ் வீரேஷ் வரைந்த ஓவியம் ஒன்றும் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட உள்ளது.

பிரதமரை மோடியை உதவாக்கரை என்று விமர்சித்த பிரியங்க் கார்கே! பாஜக கடும் கண்டனம்

பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்தின் பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பேசிவருகிறார். ரோடு ஷோ எனப்படும் ஊர்வலங்களிலும் பங்கேற்கிறார். அவருக்கு கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் அமோக வரவேற்பு அளித்துவருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மைசூரில் பிரதமர் மோடி ரோடு ஷோவில் ஈடுபட்டபோது அவரது வாகனம் நோக்கி மொபைல் போன் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பிரதமரை நோக்கி பூக்களை வீசிக்கொண்டிருந்த பெண் பாஜக தொண்டர் ஒருவர் உற்சாகத்தில் தன் கையில் இருந்த செல்போனையும் வீசி ஏறிந்துவிட்டார் எனவும் எந்த ஒரு தவறான நோக்கத்திலும் விசப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பிரதமர் மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த இருப்பதாக சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000: கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!