PM Modi visit to Wayanad | வயநாடு செல்லும் பிரதமர் மோடி! வயநாடு பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியுமா?

By Dinesh TG  |  First Published Aug 10, 2024, 9:35 AM IST

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று வயநாடு செல்கிறார். இதையொட்டி, வயநாடு பேரிடயை தேசிய பேரிடராக அறிவித்து கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
 


கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை வேளையில் அடுத்தடுத்த நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், முண்டக்கை, மேப்பட்டி, சூரல்மலை ஆகிய மூன்று கிராமங்கள் மண்ணில் புதைந்து பலத்த சேதமடைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 380க்கும் மேற்பட்டோரு இறந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடவுளின் தேசத்தின் இந்த பெரும் சோகத்திற்கு நிவாரணமாக தமிழக அரசும், தமிழ் திரை துறையை சேர்ந்த நடிகர், நடிகைகளும், மற்ற தொழிலதிபர்களும் பெரிய அளவிலான நிவாரண தொகையினை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, இன்று (ஆகஸ்ட் 10ம் தேதி) வயநாடுக்கு சென்று நிலச்சரிவு சேதங்களை பார்வையிட உள்ளார். அதிகாரப்பூர்வ தகவலின் படி காலை 11 மணியளவில் கண்ணூர் வந்தடையும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

வயநாடு நிலச்சரிவு.. நிவாரண பணிகளை ஆய்வு செய்ய  கேரளா செல்லும் பிரதமர் மோடி - முழு விவரம்!

இதனிடையே, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியின் தலைமையில் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

2013ம் ஆண்டு மக்களவையில் அப்போதைய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அளித்த பதிலின்படி, "இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசின் கீழ் எந்த விதியும் இல்லை." என்றார்.

அந்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மத்திய அரசு, பேரிடரின் தீவிரம் மற்றும் அளவு, நிவாரண உதவியின் அளவு, இடர்பாடுகளை சமாளிக்கும் மாநில அரசின் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இயற்கை பேரிடரை மதிப்பிடுகிறது. உதவி மற்றும் நிவாரணம் போன்றவற்றை வழங்குவதற்கான திட்டத்தில் உள்ள மாற்றுகள் மற்றும் விரைவுபடுத்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இயற்கையின் பேரிடருக்கு, ஏற்கனவே நிறுவப்பட்ட நடைமுறையைப் பின்பற்றிய பிறகு, தேசிய பேரிடர் மீட்பு நிதியத்திலிருந்து (NDRF) கூடுதல் உதவியும் பரிசீலிக்கப்படுகிறது.

Wayanad : வயநாட்டில் இருந்து புறப்பட்ட ராணுவம்.! கேரள மக்களிடம் எங்கள் இதயங்களை விட்டு செல்வதாக நெகிழ்ச்சி

இயற்கை பேரிடர்களை அடுத்து தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் முதன்மையான பொறுப்பு என்றும் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

click me!