டெல்லியில் காதலியின் பிறந்த நாளுக்கு ஐபோன் பரிசளிப்பதற்காக தாயின் நகையை திருடிய மாணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியான நஜாப்கர் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் தனது காதலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் காதலிக்கு ஐபோன் வாங்கி கொடுத்தால் சரியாக இருக்கும் என மாணவன் நினைத்துள்ளார். ஆனால், ஐபோன் வாங்கும் அளவிற்கு அவரிடம் பணம் இல்லாததால் தாயின் உதவியை நாடி உள்ளார்.
ஆணவப்படுகொலை என்பது வன்முறை இல்ல; அக்கறை தான் சாமி - ரஞ்சித் விளக்கம்
undefined
காதலியின் பிறந்த நாள் குறித்து தாயிடம் விளக்கிய மாணவன், ஐபோன் வாங்க பணம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து சிறுவனை, தாய் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தனது தாயின் கம்மல், தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட நகைகளை திருடி உள்ளார். திருடிய நகைகளை கக்ரோலா பகுதியில் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து புதிய ஐபோனை வாங்கி தனது காதலிக்கு பரிசாக வழங்கி சிறுவன் தனது காதலியை இம்ப்ரஸ் செய்துள்ளார்.
ரீல் லைப் மட்டும் இல்ல; ரியல் லைப்லயும் விவசாயம்னா ரொம்ப பிடிக்கும் - நடவு பணியில் சசிகுமார்
இதனிடையே தனது நகைகளை காணவில்லை என்று தவித்த சிறுவனின் தாயார் இது தொடர்பாக காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிறுவன் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் சிறுவனிடம் இருந்து திருட்டு நகைகளை பெற்றுக் கொண்டு பணம் கொடுத்ததற்காக நகைக்கடையைச் சேர்ந்தவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் திருடிய பணத்தில் வாங்கப்பட்ட ஐபோனையும் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.