
நாட்டில் உள்ள இளைஞர்களுக்கள் முன்னேற்றம், கல்வி, மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது குறித்து பிரதமர் மோடி புத்தகம் எழுத உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் புத்தகம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புத்கத்தை பென்குயின் ராண்டன் ஹவுஸ் (பி.ஆர்.எச்.) நிறுவனத்தினர், பல்வேறு மாநில மொழிகளில் வௌியிடஉள்ளனர்.
புத்தகம்
‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய பேச்சுகள், அறிவுரைகள் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதையடுத்து ஒரு புத்தகம் எழுத பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். மான் கிபாத் நிகழ்ச்சியில் கூறிய கருத்துக்களை தொகுத்து, புதிய விஷயங்களை சேர்த்து இந்த புத்தகம் வௌிவர இருக்கிறது.
மாணவர்களுக்காக
பிரதமர் மோடி எழுத உள்ள இந்த புத்தகம் குறிப்பாக 10ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வு நேரத்தில் எப்படி தயாராக வேண்டும், மன அழுத்தத்தை தவிர்ப்பது எப்படி, சிறப்பாக தேர்வை எழுதுவது உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கி இருக்கும்.
நண்பராவார் மோடி
இந்த புத்தகம் வௌியானபின், மாணவர்களின் நண்பராக பிரதமர் மோடி திகழ்வார், அவர்கள் சிறப்பாக தேர்வு எழுத இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும் என பதிப்பகத்தார் தெரிவிக்கின்றனர்.
எதிர்காலத்துக்கு எப்படி தயாராகவேண்டும், மதிப்பெண்களைக் காட்டிலும் அறிவுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை எளிய மொழியில் தரப்பட உள்ளது.
இளைஞர்களின் முன்னேற்றம்
பிரதமர் மோடி இதுகுறித்து கூறுகையில், “ என் ஆழ்மனதில் தோன்றிய ஒரு விஷயத்தால் நான் புத்தகம் எழுத தேர்வு செய்தேன். என் அடிப்படை நோக்கமே இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், எதிர்காலத்தை வழிநடத்த வேண்டும் என்பதுதான்’’ எனத் தெரிவித்துள்ளார்.
பெருமை கொள்கிறோம்
புத்தகத்தின் வெளியீட்டாளரும், பி.ஆர்.எச். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான நாகேஷ் கூறுகையில் “ நாட்டின் இளைஞர்களுக்காக பிரதமர் மோடி கூறும் அறிவுரைகளை நாங்கள் புத்தகமாக வௌியிட உள்ளது பெருமையாக இருக்கிறது. வெற்றிக்கான அவரின் செயல்பாடு, இந்தியாவில் மாற்றத்தை உருவாக்கும். அவருடன் இணைந்து செயல்பட்டு, அவரின் கருத்துக்களை நாட்டுக்கும், எல்லை கடந்தும் கொண்டு சேர்ப்பதில் பெருமை கொள்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.