4 மாநில தேர்தல் முடிவுகள்.. 2024 மக்களவை தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் ..பிரதமர் மோடி பேச்சு..

Published : Mar 10, 2022, 09:36 PM IST
4 மாநில தேர்தல் முடிவுகள்.. 2024 மக்களவை தேர்தலின்  தலைவிதியை தீர்மானிக்கும் ..பிரதமர் மோடி பேச்சு..

சுருக்கம்

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் அதன் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். முதல்முறை வாக்கு செலுத்தும் வாக்காளர்கள் பாஜகவின் வெற்றியை உறுதி செய்துள்ளதாக அவர் பேசினார்.  

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் அதன் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். முதல்முறை வாக்கு செலுத்தும் வாக்காளர்கள் பாஜகவின் வெற்றியை உறுதி செய்துள்ளதாக அவர் பேசினார்.

உத்தர பிரதேசம் , பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்ரகாண்ட உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பஞ்சாபை தவிர பிற 4 மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.  பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 117 இடங்களில் 92 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்ரகாண்ட் மாநிலங்களில் அமோக வெற்றி பெற்ற நிலையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

மேலும் படிக்க: சாதித்த பாஜக.. சறுக்கிய காங்கிரஸ்.. 5 மாநில தேர்தல் ‘அலசல்’ ரிப்போர்ட் !!

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்முறை வாக்கு செலுத்தும் வாக்காளர்கள் பாஜகவின் வெற்றியை உறுதி செய்துள்ளதாக அவர் பேசினார்.பஞ்சாபில் பாஜக 'கணக்கெடுக்கும் சக்தியாக' உருவெடுத்து வருவதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலுக்காக உழைத்த பாஜகவினர் கடினமான சூழ்நிலையிலும் பஞ்சாபில் தங்கள் பணியால் கட்சியையும், கொடியையும் பெருமைப்படுத்தியுள்ளனர் என்று கூறினார்.

மேலும் 2019ல் மத்தியத்தில் பாஜக ஆட்சியில் மீண்டும் அமர்ந்தது. அப்போது 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்றதால் ஏற்பட்டது என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர். 2022 தேர்தல் முடிவுகள் 2024 தேசியத் தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும் படிக்க : up election result: உ.பியில் 36 ஆண்டுகால வரலாறு உடைந்தது பாஜக: மோடி-யோகி மேஜிக்: அரியணையில் ‘பாபா புல்டோசர்’

மேலும் உக்ரைன்-ரஷ்யா போரின் பின்விளைவு ஒவ்வொரு நாடும் பாதிக்கப்படும் எனவும் போரில் போராடும் நாடுகளுடன் இந்தியாவுக்கு நிதி, பாதுகாப்பு, அரசியல் உறவுகள் உள்ளன எனவும் அவர் கூறினார். மேலும்  சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்வதால் விலை உயர வாய்ப்புள்ளது. அதனுடன், சர்வதேச அளவில் நிலக்கரி, எரிவாயு, உரங்களின் விலை உலகம் முழுவதும் வேகமாக உயர்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், இந்திய குடிமக்கள் உக்ரைனில் சிக்கித் தவித்தபோதும், நாட்டின் மன உறுதியை உடைக்கும் பேச்சு எழுந்தது துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி,  இந்தியர்களை மீட்கும் பணியில் இறங்கிய மத்திய அரசின் OperationGanga எனும் திட்டத்தின் மீது அவதூறு செய்ய முயன்றதாக விமர்சித்துள்ளார். ஆனால் இது இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய பெரிய கவலை என்று அவர் உருக்கமாக பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!