up election result: இலவச ரேஷன் திட்டத்துக்கு மாதம் ரூ.300 கோடி: தேர்தலுக்கு முன் செலவிட்ட உ.பி. அரசு

By Pothy Raj  |  First Published Mar 10, 2022, 5:50 PM IST

up election result: உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பாக, கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை இலவச ரேஷன் திட்டத்துக்காக மாதத்துக்கு ரூ.300 கோடியை முதல்வர் யோகி தலைமையிலான அரசு செலவிட்டுள்ளதாகதகவல்கள் தெரிவிக்கின்றன


உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பாக, கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை இலவச ரேஷன் திட்டத்துக்காக மாதத்துக்கு ரூ.300 கோடியை முதல்வர் யோகி தலைமையிலான அரசு செலவிட்டுள்ளதாகதகவல்கள் தெரிவிக்கின்றன

14 லட்சம் கிலோ கோதுமை, 95ஆயிரம் கிலோ அரிசி, 10ஆயிரம் கிலோ சன்னா பருப்பு, 10.19 கோடி லிட்டர் சோபாபீன் எண்ணெய், 10ஆயிரம் கிலோ உப்பு ஆகியவை இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன

Latest Videos

undefined

வெற்றிக்கு இது காரணமா

தேர்தலுக்கு முன்பாக கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து இதுபோன்று இலவசப் பொருட்களை தொடர்ந்து வழங்கியதன் தாக்கம்தான் பாஜக பக்கம் மக்கள் ஈர்க்கப்பட காரணம் என பல்வேறு அரசியல் விமர்சகர்களும், பார்வையாளர்களும் தெரிவிக்கிறார்கள்.

மாநிலம் முழுவதும் இலவச ரேஷன் திட்டத்தின் மூலம் 14.60 கோடிபேர் பயனடைந்துள்ளர். மாதத்துக்குரூ.300 கோடி ரேஷன் திட்டத்துக்காக செலவிடப்பட்டுள்ளதாக உ.பி. அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம், பிரதான் மந்திரி கரீப் கல்யான் ஆன் யோஜனா ஆகிய திட்டத்திந் மூலம் மக்களுக்கு சோயாபீன் எண்ணெய், உப்பு, சன்னா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. 

ஏழை மக்கள்

மாதத்துக்கு இருமுறை வழங்கப்படும் ரேஷன் பொருட்களில் முதல்முறை தானியங்களும், 2-முறை மற்ற பொருட்களும் வழங்கப்படும். உ.பி,யில் அம்பேத்நகர் மாவட்டத்தில்தான் கடந்த ஆண்டு டிசம்பரில் அதிகபட்சமாக 3.89 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கியுள்ளனர். 

அதைத்தொடர்ந்து ஜனவரியில் மிர்சாபூர்ில் 4.40 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் வாங்கியுள்ளனர். இந்த இரு மாவட்டங்களிலும் அதிகமான அளவு வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் உள்ளனர் என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இலவச ரேஷன் திட்டம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு போதுமான அளவு உணவு தானியங்களை ரேஷன் திட்டத்தின் மூலம் வழங்கி, பட்டினிச்சாவின்றி கொண்டு சென்றதன் விளைவுதான் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதிலும் பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏராளமான கோதுமை, அரிசி, சோயா எண்ணெய், பருப்பு வகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. மக்களை பட்டினியில்லாமல் கொண்டு சென்றது, இலவசப் பொருட்களை தொடர்ந்து வழங்கியதன் விளைவுதான் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாக அரசியல் பார்வையாளர்களால் கூறப்படுகிறது

click me!