up election result: உத்தரப்பிரதேச்தில் 36 ஆண்டுகளாக இருந்த வரலாற்றை உடைத்து, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக. பிரதமர் மோடி, முதல்வர் யோகியின் மேஜி்க் பிரச்சாரத்தால் 2-வதுமுறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது.
உத்தரப்பிரதேச்தில் 36 ஆண்டுகளாக இருந்த வரலாற்றை உடைத்து, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக. பிரதமர் மோடி, முதல்வர் யோகியின் மேஜி்க் பிரச்சாரத்தால் 2-வதுமுறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது.
பாபா புல்டோசர்
கோரக்பூர் தொகுதியில் போட்டியி்ட்ட "பாபா புல்டோசர்" என்று மக்களால் புதிய பெயரால் புகழப்படும் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக முன்னிலை
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேதச்துக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில் பெரும்பான்மைக்குத் தேவையான 204 வாக்குகளைக் கடந்து 240 தொகுதிகளுக்கும் மேலாக பாஜக முன்னிலை பெற்று வருகிறது.
உ.பி.யில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது என்றாலும், கடந்த தேர்தலைப் போன்று 300 இடங்களுக்கு மேல் பெறுமா என்பது சந்தேகம்தான்.
பிரச்சாரம்
உ.பியில் ஆட்சியைப் பிடிக்கும்கட்சிதான் மத்தியில் ஆட்சியை முடிவு செய்யும் என்று அரசியல்வட்டாரத்தில் கூறப்படுவதுண்டு. அந்தவகையில் உ.பி.யில் ஆட்சியை கோட்டைவிடக்கூடாது என்பதற்காக பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகர்களான பிரதமர் மோடி, உள்துறைஅமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத்சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத் என பலரும் தீயாகப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தனர்.
பெரிய வெற்றி
மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்துள்ள பணிகள், அளித்த தி்ட்டங்கள், கொரோனா காலத்தில் செய்த பணிகள், ஆகிவற்றை பட்டியலிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவின் மக்களிடம் கொண்டு சென்றனர். பிரதமர் மோடி தலைமையில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதற்கு இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி பாஜக நகர்கிறது.
36 ஆண்டு வரலாறு
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 1980களில் காங்கிரஸ்கட்சி வலிமையாக இருந்தது. 1980-88வரை மட்டுமே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நடந்த இரு தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடித்தது. அந்த 8 ஆண்டுகளில் முதல்வர்களாக விஸ்வநாத் பிரதாப் சிங், ஸ்ரீபதி மிஸ்ரா, நாராயன் தத் திவாரி, வீரபகதூர் சிங் ஆகியோர் இருந்தனர்.
அதன்பின் உத்தரப்பிரதேதச்தில் 9 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. எந்தக் கட்சியும் தொடர்ந்து இருமுறை ஆட்சியைப் பிடிக்கவில்லை. சமாஜ்வாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் மாறிமாறி ஆண்டபோதிலும்கூட இருமுறை ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆனால்,அந்த வரலாற்றை உடைத்து பாஜக தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது
15 ஆண்டுகளுக்குப்பின்
அதிலும் கடைசியாக பாஜக 2000-2002 ஆண்டு மாயாவதியுடன் கூட்டணி அமைத்து 2ஆண்டுகள் ஆட்சி அமைத்தது. ராஜ்நாத் சிங் முதல்வராக இருந்தார். ஆனால், மாயாவதி பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெற்றபின் பாஜகஆட்சி கவிழந்தது. ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆட்சியைப் பிடிக்காமல் இருந்த பாஜக 2017ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது.
அப்போதிருந்து உ.பி.யை கோட்டையாக மாற்றி வருகிறது. ஏறக்குறைய 36 ஆண்டுகளாக உ.பி.யில் எந்தக்கட்சியும் தொடர்ந்து இருமுறை ஆட்சி செய்ததில்லை என்றவரலாற்றை பாஜக மாற்றிவிட்டது.
கடும் போட்டி
உ.பியில் இந்த தேர்தலில் கடுமையான போட்டி நிலவியது. பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் ஆகிய 4 பெரிய கட்சிகள் போட்டியிட்டன. இதில் சமாஜ்வாதிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் களத்தில் போட்டி நடக்கிறது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் மனதிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளது.
காங்கிரஸை மக்கள் ஏற்கவில்லையா
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக கடந்த 2019ம் ஆண்டு பிரியங்கா காந்தி பொறுப்பேற்றபின் உ.பி.யைச் சேர்ந்தவராக இருந்து அங்கேயதங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்கள், பேரணிகள், பிரச்சாரங்கள் என பிரியங்கா காந்தி செய்தபோதிலும் எதுவுமே மக்கள் மனதில் ஒட்டவில்லை, மக்கள் ஏற்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது.
எதிர்பார்ப்பு
இந்ததேர்தலில் முதல்வர் ஆதித்யநாத் எங்கு போட்டியிடுவார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஏனென்றால், உ.பி.யில் மேலவை இருப்பதால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உ.பி. மக்களால் தேர்தந்தெடுக்கப்பட்டு எந்த முதல்வரும் ஆட்சிக்குவரவில்லை. மேலவை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்எல்சியாகி முதல்வராக வந்தனர்.
ஆதலால், யோகி ஆதித்யநாத் , கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கோரக்பூர் யோகிக்குகோட்டை என்பதாலும் வெற்றி ஏறக்குறைய உறுதி என தொகுதி ஒதுக்கும்போதே பேசப்பட்டது.
மீண்டும் பாபா புல்டோசர் வருவாரா
அதிலும் கோரக்பூரில் பிரச்சாரத்துக்கு யோகி வந்திருந்தபோது, சாலை ஓரத்தில் அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள், சொத்துக்களை புல்டோசர்மூலம் அகற்றினார். இதனால் கோரக்பூர் மக்கள், யோகி ஆதித்யநாத்தை “பாபா புல்டோசர்” என்றே புகழ்ந்தனர்.
கோரக்பூர் தொகுதியில் போட்டியி்ட்ட பாபா புல்டோசர் யோகியும் வென்றுள்ளதால் தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராக வருவாரா என்பதை பாஜக மேலிடம் முடிவு செய்யும்.