மாபெரும் வெற்றியை தட்டி தூக்கிய பாஜக.. நல்லாட்சி கொடுத்த அங்கீகாரம்..மத்திய இணையமைச்சர் பாராட்டு..

Published : Mar 10, 2022, 02:51 PM ISTUpdated : Mar 10, 2022, 03:11 PM IST
மாபெரும் வெற்றியை தட்டி தூக்கிய பாஜக.. நல்லாட்சி கொடுத்த அங்கீகாரம்..மத்திய இணையமைச்சர் பாராட்டு..

சுருக்கம்

பிரதமர் மோடி நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  

சமீபத்தில் நடந்த முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆரம்ப புள்ளியாக கருதப்படும், இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்தனர். மிக அதிக சட்ட மன்ற தொகுதிகளை உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது என்பது குறித்தே எல்லோருடைய பார்வையும் இருந்தது. இந்நிலையில் தற்போது நிலவரப்படி, பஞ்சாபை தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

மேலும் படிக்க: Exclusive : Election Results 2022 : சாதித்த பாஜக.. சறுக்கிய காங்கிரஸ்.. 5 மாநில தேர்தல் ‘அலசல்’ ரிப்போர்ட் !!

403 உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக 267 இடங்களை கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக, சமாஜ்வாதி கட்சி 131 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி வெறும் ஒரு இடத்தில் மட்டுமே தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. உத்ரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 46 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதியில் பாஜக 30 இடங்களையும் காங்கிரஸ் வெறும் 7 இடங்களையும் தனது வசமாக்கியுள்ளன. கோவா மாநிலத்தை பொறுத்தவரை இழுப்பறியே நீடித்து வருகிறது. அங்கு பாஜக 19 தொகுதிகள், காங்கிரஸ் 12 தொகுதிகள், திரிணாமுல் 3 தொகுதிகள், ஆம் ஆத்மி 2 தொகுதிகள் ஆகியவற்றை பெற்றுள்ளன. 

தற்போது தேர்தல் முடிவை பார்க்கும் போது பாஜக கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதாவது தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் 4 -யில் பெரும்பான்மை இடங்களை வென்று முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் , போட்டியிட்ட முதல் தேர்தலிலே ஆம் ஆத்மி பெரும்பான்மை இடங்களை வென்று வாகையை சூடியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி அங்கு படுதோல்வியை சந்தித்துள்ளது.

மேலும் படிக்க: UP Election Results 2022 : சரிவில் இருந்த மீண்டதா பாஜக..? அகிலேஷ் சொதப்பியது எங்கே ? அலசல் ரிப்போர்ட் !!

2014 முதல் தற்போது வரை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வரும் புதிய வகை ஆட்சி மற்றும் அரசியலுக்கு தேர்தல் முடிவுகள் அங்கீகாரம் கொடுத்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014, 2017, 2019 மற்றும் இப்போது மீண்டும் 2022 இல் பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரப்பிரதேச மக்கள் ஆட்சி அரியணையை வழங்கியுள்ளனர். 

பாஜக ஆட்சிக்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் யாவும் இது நல்லாட்சிக்கு நோக்கி மக்கள் கொடுத்த ஆதரவு என்று அவர் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி ஆட்சி, ஊழலற்ற பொது திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். சட்ட-  ஒழுங்கு, குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்த ஆட்சி சிறந்து விளங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் ஊழல், மாஃபியா, இடைநிலை அரசியலை முற்றிலுமாக அகற்றும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு! சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!