செருப்பை காட்டி விரட்டப்பட்ட பாஜக வேட்பாளர்..! 1.79 லட்சம் வாகுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி!!

Published : Mar 10, 2022, 06:57 PM ISTUpdated : Mar 10, 2022, 07:27 PM IST
செருப்பை காட்டி விரட்டப்பட்ட பாஜக வேட்பாளர்..! 1.79 லட்சம் வாகுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி!!

சுருக்கம்

UP Election Results 2022 :மத்திய பாதுகாப்புதுறை அமைச்சரின் மகன் பங்கஜ் சிங் வரலாற்றில் முதல் முறையாக சட்ட மன்ற தேர்தலில் மிக அதிக அளவு வாக்குகள் பெற்று அமோக வெற்றியை பெற்றுள்ளார்.

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் நொய்டா தொகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் நிறுத்தப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுப்பட்டு வந்தனர். மேலும் மூத்த அமைச்சர் மகன் என்பதால் இவரது தொகுதியிலும் பரப்புரை வேகம் எடுத்தது.

இச்சூழலில் தான், இவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு எதிராக நொய்டா மக்கள் போராட்டம் செய்தது சர்ச்சையானது. நொய்டா தொகுதி பாஜக வேட்பாளர் பங்கஜ் சிங் ஆதரித்து பாஜக எம்.பி மனோஜ் திவாரி வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் அவர்களை அங்கிருந்து வாக்கு சேகரிக்க விடாமல் தூரத்தி அனுப்பினர். இந்நிலையில் தொடர்ந்து பங்கஜ் சிங்கிற்கு ஆதரவாக மனோஜ் திவாரி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். உடனே அங்கிருந்த மக்கள் மொத்தமாக கூடி பங்கஜ் சிங் மற்றும் மனோஜ் திவாரிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

மேலும் பாஜகவிற்கு எதிராக கடுமையான கோஷங்களையும் எழுப்பினர். பாஜக உள்ளே வர கூடாது என்றும் இங்கே பிரச்சாரம் செய்ய கூடாது என்று கத்தி கூச்சலிட்டனர். மேலும் அதோடு விடாமல், எம்.பி மனோஜ் திவாரிக்கு எதிராக அங்கு கூடியிருந்த மக்கள் செருப்பை தூக்கி காட்டி விரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் நேரம் என்பதால் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மக்கள் எதிர்ப்பு வலுவாக இருப்பதால் கண்டிப்பாக இந்த தொகுதியில் மத்திய அமைச்சரின் மகன் தோல்வியடைவது நிச்சயம் என்று அரசியல் தளத்தில் பேசப்பட்டது. 

இன்று தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. உத்தரபிரதேசத்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. யாரும் எதிர்பாராத விதமாக, நொய்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் பங்கஜ் சிங் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.இந்திய அரசியல் வரலாற்றில் சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இங்கு பாஜக வேட்பாளர் பங்கஜ் சிங் பதிவான வாக்குகளில் மொத்தமாக 70.84 சதவிகித வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 16.42 சதவிகித வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் கட்சி 4.36 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. இதற்கு முன் சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிராவில் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவருமான அஜித் பவார் பாராமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதுவே அதிக வாக்கு வித்தியாச வெற்றியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சாதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத சிங் மகன் பங்கஜ் சிங் முறியடித்துளார்.

மேலும் படிக்க: UP Election Results 2022 : சரிவில் இருந்த மீண்டதா பாஜக..? அகிலேஷ் சொதப்பியது எங்கே ? அலசல் ரிப்போர்ட் !!

PREV
click me!

Recommended Stories

Hostel Incident : தோழி சென்ற சில நிமிடங்களில்.. விடுதிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ