இது திணிப்பு அல்ல; வெறும் பரிந்துரை மட்டுமே... பிரதமர் மோடி கூறுவது என்ன?

By Narendran SFirst Published Oct 28, 2022, 10:21 PM IST
Highlights

ஒரே நாடு ஒரே காவல் சீருடை திட்டத்தை கொண்டு வருவது குறித்து அனைத்து மாநிலங்களும் ஆலோசிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

ஒரே நாடு ஒரே காவல் சீருடை திட்டத்தை கொண்டு வருவது குறித்து அனைத்து மாநிலங்களும் ஆலோசிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஹரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நடைபெற்று வரும் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களுக்கான 2 நாள் சிந்தனை அமர்வு கூட்டத்தில்  காணொளி வாயிலாக பிரதமர் மோடி கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, மாநில வாரியாக உள்ள காவல்துறையினர் அனைவரும் சமம் என்ற முறையிலும், அனைத்து அதிகாரிகளும் ஒரே தன்மை கொண்டவர்கள் என்பதை உணர்த்தும் வகையில்  ஒரே நாடு ஒரே காவல் சீருடை திட்டத்தை கொண்டு வருவது குறித்து அனைத்து மாநிலங்களும் ஆலோசிக்க வேண்டும்.

இதையும் படிங்க: சட்டப்பிரிவு 370 ரத்து காரணமாக காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் குறைந்துள்ளது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

குறிப்பாக, இவை திணிப்பு அல்ல என்றும் இது வெறும் பரிந்துரை மட்டுமே. இவற்றை பரிந்துரையாக எடுத்துக்கொண்டு ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாநில அரசு ஒத்துழைத்தால் இப்போதே நடைமுறைப்படுத்தாலாம் இல்லையென்றால் 50-100 வருடங்களுக்குள் நடக்கலாம். குற்றவாளிகளை கண்டறிய பாதுகாப்பு துறையின் ஒற்றுமையே முக்கியம். அதனை சீருடையில் இருந்து தொடங்கலாம். நம் நாட்டு மக்கள் சட்டத்தை மதித்து நடக்கும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்க எடுக்க வேண்டியது மத்திய அரசு மற்றும் ஒவ்வொரு மாநில அரசின் பொறுப்பு.

இதையும் படிங்க: இந்திய ராணுவத்தில் ரூ.81,100 சம்பளத்தில் சூப்பர் வேலை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

போலியான செய்திகள் நாட்டில் பெரும் புயலை உருவாக்கலாம் என்பதால் மக்களுக்கு சிந்திக்கும் திறனை கற்பிக்க வேண்டும். ஒரு விஷயத்தை நம்புவதற்கு முன் மக்கள் அதனை சார்பார்த்து கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக மாநில அரசுகள் பயங்கரவாதத்தின் அடித்தளத்தை உடைக்க சிறப்புடன் செயல்பட்டதாகவும், இனிமேலும் நக்சல்களை மற்றும் அவர்களின் வடிவங்களை கூட நாம் தோற்கடிக்க வேண்டும், அதாவது அது துப்பாக்கி ஏந்தி இருந்தாலும் சரி, கையில் பேனா ஏந்தி இருந்தாலும் சரி, அதற்கு எதிராகவும் நாம் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

click me!