ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: பிரதமர் மோடிக்கு பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் பாராட்டு!

By Manikanda PrabuFirst Published Dec 7, 2023, 4:04 PM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்காக பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், தெலங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரமில் ஜோரம்  மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ள பாஜக, மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக, சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்டாயம் வெற்றி பெறும் எனவும், மத்தியப்பிரதேசத்தில் நெருக்கமான போட்டி இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

Latest Videos

ஐந்து மாநிலத் தேர்தல்களில் மூன்றில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கிடையே நடைபெற்ற பாஜகவின் முதல் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் தேசிய தலைவர் ஜே.பி., நட்டா உள்ளிட்ட, மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியின் தலைமையை பாராட்டி முழக்கங்களை எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கை நிராகரிப்பு!

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநில தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் தலைமைதான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல், தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் கூட, அம்மாநிலத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது ஒவ்வொரு வாரமும், அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய பாஜக நாடாளுமன்றக் கட்சி கூட்டம் கூடுகிறது. அக்கூட்டத்தில் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள், பாஜகவின் அமைப்பு மற்றும் அரசியல் பிரசாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பேசுவர்.

click me!