ரூ. 240 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..

Published : Dec 30, 2023, 12:17 PM ISTUpdated : Dec 30, 2023, 12:39 PM IST
ரூ. 240 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..

சுருக்கம்

புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு சென்றுள்ளார். அவரின் இந்த பயணத்தில் ரூ.15,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக பிரதமர் மோடியின் அயோத்தி பயணம் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக கருதப்படுகிறது.

6 வந்தே பாரத், 2  அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் பிற ரயில் திட்டங்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார். புனித நகரத்தின் "வளமான பாரம்பரியத்தை" பாதுகாப்பதில் தனது அரசாங்கம் உறுதியாக இருப்பதாக தனது அயோத்தி பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் அயோத்தி சென்றுள்ள பிரதமர் மோடி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்தி பென் படேல் வரவேற்றனர்.

 

இதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வாகன பேரணியாக சென்றார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இரு மருங்கிலும் பாஜக கொடிகளை ஏந்தியும், பிரதமர் மோடியின் படங்களை ஏந்தியும் அவருக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி காரின் கதவுகளை திறந்து நின்றவாறு கையசைத்து மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 240 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த நவீன ரயில் நிலைய கட்டிடத்தில் லிப்ட், எஸ்கலேட்டர்கள், உணவு பிளாசாக்கள், பூஜைக்கான கடைகள், குழந்தைகள் பராமரிப்பு அறைகள், காத்திருப்பு கூடங்கள் என அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. 

வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம்.. ரெட் அலெர்ட் விடுத்த IMD - விமானம் மற்றும் ரயில்கள் இயக்குவதில் சிக்கல்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காரில் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்! ஆக்ரா போலீஸ் அட்டூழியம்!
இண்டிகோ விமானத்தில் புகுந்த புறா! நடுவானில் பயணிகளுக்கு ஆச்சரியம்!