பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்திக்கு செல்ல உள்ளார்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்திக்கு செல்ல உள்ளார். இதுகுறித்து தனது x வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தையும், நகரத்தில் மறுவடிவமைக்கப்பட்ட ரயில் நிலையத்தையும் திறந்து வைப்பதாக தெரிவித்தார்..
அவரின் பதிவில் “ உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், இணைப்பை மேம்படுத்தவும், ஸ்ரீராமரின் நகரமான அயோத்தியின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இந்த திசையில், புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “ அயோத்தி, உ.பி., உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் மேலும் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, துவக்கி வைக்கும் பாக்கியத்தையும் பெற உள்ளேன்,'' என்றும் பதிவிட்டுள்ளார்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிரதமர் மோடி இன்று காலை காலை 11.15 மணியளவில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும் புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். மேலும் பல ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இதை தொடர்ந்து மதியம் 12.15 மணியளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும், மதியம் 1 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார், அங்கு அவர் 15,700 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்..
சத்ரபதி சிவாஜி : இந்திய கடற்படை உயர் அதிகாரிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மத்திய அரசு..!!
அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்பிலான திட்டங்களும், உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுடன் தொடர்புடைய சுமார் ரூ.4600 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.