10ஆம் வகுப்பு மாணவனுடன் ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்திய பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
கர்நாடக மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஒருவர் நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிக்கபல்லாப்பூருக்கு பள்ளியில் இருந்து ஆய்வுச் சுற்றுலா சென்றபோது அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியை முருகமல்ல கிராம அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை புஷ்பலதா என்பது தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களில் அந்த ஆசிரியை மாணவனுக்கு முத்தமிடுவது போன்றும், மாணவன் ஆசிரியைக்கு முத்தமிடுவது போன்றும், ஆசிரியையை மாணவன் தூக்குவது போன்றும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த சம்பவம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. “இந்த சமூகத்தில் நாம் எங்கு செல்கிறோம்? கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனுடன் முருகமல்ல அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரின் காதல் போட்டோஷூட்டின் படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகியுள்ளன” என அந்த புகைப்படங்களை பகிர்ந்து எக்ஸ் பயனர் அமித் சிங் ரஜாவத் வேதனை தெரிவித்துள்ளார்.
Where are we heading as a society ?
Pictures and videos from a romantic photoshoot of a government school teacher with a Class 10 student in Karnataka's Murugamalla Chikkaballapur district, went viral, following which the student's parents filed complaint with the Block… pic.twitter.com/WviIHtOP3J
மேலும், இதனால் ஆத்திரமடைந்த 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனின் பெற்றோர், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர்.
லடாக்கில் 29 சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், வட்டார கல்வி அலுவலர் உமாதேவி பள்ளிக்கு சென்று நேரடியாக விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, அவரது அறிக்கையில் அடிப்படையில் அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து சிக்கபல்லாபூர் மாவட்ட கல்வித்துறை இணை இயக்குனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.