Red Alert for North India : டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
டெல்லி-NCRன் (National Capital Region) பல பகுதிகளில் இன்று மிதமான மூடுபனியுடன் கூடிய குளிர் காலநிலை நிலவி வருகின்றது. நமது தேசிய தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக சிவப்பு வண்ண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
"பஞ்சாப், ஹரியானா, டெல்லி உத்திரப் பிரதேசம், வடக்கு ராஜஸ்தான் மற்றும் வடக்கு மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களுக்கு அடர்த்தியான மூடுபனியை முன்னிட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் வாகனம் ஓட்டும் போதும் அல்லது எந்தப் போக்குவரத்திலும் வெளியில் செல்லும்போது கவனமாக இருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
லடாக்கில் 29 சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!
undefined
குறிப்பாக இரண்டு மற்றும் நன்கு சக்கர வாகனங்களை ஓட்டும் போது மூடுபனி (Fog Lamps) விளக்குகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான மற்றும் ரயில் சேவைகளை பற்றி அடிக்கடி தெரிந்துகொண்டு உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்றும் IMD தனது X பக்கத்தில் வெளியிட்ட ஒரு இடுகையில் தெரிவித்துள்ளது.
ரயில்கள் மற்றும் விமானங்கள் கால தாமதமாக புறப்படுகிறது என்றும் அந்த பதிவில் IMD குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், பனிமூட்டம் காரணமாக தலைநகர் மற்றும் தலைநகருக்கு செல்லும் பயணிகளும் சிரமங்களை எதிர்கொண்டனர். விமானங்கள் மற்றும் ரயில்கள் தொடர்ந்து தாமதமாகி, வெளிச்சம் குறைவாக இருந்ததால் அவை திருப்பி விடப்பட்டன.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 8.30 மணி வரை வானிலை காரணமாக 80க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாக செய்திகள் கிடைத்துள்ளது. "மூடுபனி மற்றும் வானிலை காரணமாக எங்கள் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமானது" என்று டெல்லியில் இருந்து சிக்கிம் செல்லும் பயணி ஒருவர் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.