நாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கர் மேளா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி , 100 ஆண்டுகளாக நீடிக்கும் வேலையின்மைச் சிக்கலை 100 நாட்களில் தீர்க்க இயலாது என்று தெரிவித்தார்
நாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கர் மேளா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி , 100 ஆண்டுகளாக நீடிக்கும் வேலையின்மைச் சிக்கலை 100 நாட்களில் தீர்க்க இயலாது என்று தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியின் தொடக்க நாளான இன்று நாடுமுழுவதும் 75 ஆயிரம் பேருக்கு பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் இருந்து பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
நாடுமுழுவதும 50 மத்திய அமைச்சர்கள் இணைந்து 20ஆயிரம் பேருக்கு பணி நியமண ஆணைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க முடியாதவர்களுக்கு மின்அஞ்சல் மற்றும் தபால் மூலம் பணி நியமன ஆணை அனுப்பி வைக்கப்படும்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் “ நாட்டில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கவும், மக்களின் நலனை உறுதி செய்யவும் பிரதமர் மோடி தொடர்ந்து உறுதி பூண்டுள்ளார். பிரதமர் மோடியின் உத்தரவின்படி, அனைத்து அமைச்சகங்கள், துறைகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கும், தேவையான இடங்களை உருவாக்கி ஆட்களை நிரப்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன்படி 38 அமைச்சகங்கள், துறைகளில் புதிதாக இளைஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்
10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை.. சென்னையில் பணி ஆணைகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
மத்திய அரசின் குரூப்-ஏ(கெஜடட்)குருப்-பி(கெஜடட்), குரூப்-பி(கெஜடட்அல்லாதது), குரூப்-சி, சிஆர்பிஎப், வருமானவரித்துறை ஆய்வாளர்கள், எல்டிசி, ஸ்டெனோ, கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பதவிகள் வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வருஷம் ரூ.50,000 கல்வி உதவித்தொகை... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!
இந்த நிகழ்ச்சியை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:
உலகிலே 5-வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் உலகப் பொருளாதார தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்து நாம் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம்.
உலகில் பல பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றால் போராடிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். 100 ஆண்டுகளாக நீடிக்கும் வேலையின்மைச் சிக்கல் பொருளாதாரத்தின் மிகப்பெரிய நெருக்கடியின் பக்க விளைவுகள் 100 நாட்களில் போய்விடாது.
இவ்வளவு சிக்கல் இருந்தபோதிலும்கூட, நமது தேசம், முழு பலத்துடன், புதிய முன்னெடுப்புகளுடன், மற்றும் சில இடர்களுட உலக நெருக்கடியிலிருந்து தன்னைக் காக்க முயன்று வருகிறது. மக்களின் ஒத்துழைப்பால் இதுவரை நம்மைநாம் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. கடந்த 8 ஆண்டுகளில், நமது பொருளாதாரத்தில் தடைகளை ஏற்படுத்திய பிரச்சனைகளை குறைத்திருக்கிறோம்.
மத்தியஅரசின் முத்ரா யோஜனா திட்டத்தில் 70சதவீதப் பயனாளிகள் பெண்கள்தான். சமீப ஆண்டுகளாக, 8 கோடி பெண்கள் சுயஉதவிக் குழுவில் சேர்ந்துள்ளனர், இந்த குழுவுக்கு தேவையான நிதியுதவிகளை அரசு செய்து வருகிறது
குஜராத், இமாச்சலப்பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து போராடி வரும் நிலையில், பிரதமர் மோடியின் ரோஜ்கர் யோஜனா திட்டம் அந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள துணிச்சலை வழங்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
10 லட்சம் வேலைவாய்ப்பு
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில் “ மத்திய அ ரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் வரும் மாதங்களில் 10 லட்சம் இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். மிகப்பெரியஅளவில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணி தொடங்கும்.
நாடுமுழுவதும் 50 இடங்களில் நடந்த நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி 75 ஆயிரம் பேருக்கு பணியானை வழங்கியுள்ளார். வரும் மாதங்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” எனத் தெரிவித்தார்