மாநில அரசுகள் சார்பில் தொலைகாட்சி ஒளிபரப்ப தடை.. இனி மத்திய அரசு கட்டுப்பாடில் அரசு கேபிள், கல்வித் தொலைகாட்சி

By Ezhilarasan Babu  |  First Published Oct 22, 2022, 11:53 AM IST

மாநில அரசின்  சார்பில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே  மாநில அரசின் சார்பில் செய்யப்படும் தொலைக்காட்சி ஒளிபரப்பு இனி பிரசார் பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


மாநில அரசின்  சார்பில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே  மாநில அரசின் சார்பில் செய்யப்படும் தொலைக்காட்சி ஒளிபரப்பு இனி பிரசார் பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு நடத்திவரும் தமிழ்நாடு அரசு கேபிள் கார்ப்பரேஷன் மற்றும் கல்வி தொலைக்காட்சி பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என தெரியவருகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.. இன்று ஒரே நாளில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை.. மாஸ் காட்டும் மோடி.

மாநில அரசின் பல்வேறு உரிமைகளை மத்திய அரசு அபகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. உதாரணத்திற்கு பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மருத்துவக்கல்வி  நீட் தேர்வின் மூலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. இதுபோல இன்னும் பல உரிமைகள் மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்து வருகிறது என்ற விமர்சனம் என்று வருகிறது. இந்நிலையில்தான் தமிழக அரசு கொரோனா போன்ற நெருக்கடியான காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தடையற்ற கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வி தொலைக்காட்சி என்ற திட்டத்தை தொடங்கியது.

இதையும் படியுங்கள்:  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. இபிஎஸ் மீது வழக்குப்பதிவா? அமைச்சர் ரகுபதி சொன்ன பரபரப்பு தகவல்.!

இது கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்ட திட்டமாகும். இதேபோல கேபிள் டிவி உரிமையையும் மாநில அரசு கையில் வைத்துள்ளது, ஆக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்  நடத்தப்பட்டுவரும் கல்வி தொலைக்காட்சிதான் தற்போது குறி வைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது, பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது, வேலைவாய்ப்பு மற்ற மாணவர்களின் திறனை ஊக்குவிப்பது, போன்ற பல நிகழ்ச்சிகள் அதில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

கல்வியில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கலந்துரையாடல்கள் நுழைவுத்தேர்வு குறித்த சந்தேகங்கள், விளக்கங்கள் மற்றும் கல்வியாளர்கள், ஆசிரியர்களின் நேர்காணல்கள், உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் போன்றவை அதில் இடம் பெற்று வருகிறது. மாணவர்களுக்காக மேலும் பல நிகழ்ச்சிகள் அதில் தயாரித்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில்  மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும் மற்றும் சேவை வினியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் ஒளிபரப்பப்பட்டு வரும் சேனல்கள் இனி  பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி இனி மத்திய அரசின் கீழ் இயங்கும் என்ற நிலை உருவாகி உள்ளது.
 

click me!