மத்திய பிரதேசத்தில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. துடிதுடித்து 15 பேர் பலி

By Thanalakshmi VFirst Published Oct 22, 2022, 11:15 AM IST
Highlights

மத்திய பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலியானவரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 
 

தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியில் அருகே எதிர்திசையில் வந்துக்கொண்டிருந்த லாரி மீது பேருந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இதில் காயமடைந்த 40 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது மேலும் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் பலியானவர்களில் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க:தமிழகத்தில் ஆளுநராக 4 ஆண்டுகள் இருந்தது மிக கொடுமை.. துணைவேந்தர் பதவி 40 கோடிக்கு விற்பனை.. பன்வாரிலால்.!

விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தரபிரதேச மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்திற்கு உத்தரபிரதேச மற்றும் மத்திய பிரதேசம் முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதியை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க:மாணவர்களுக்கு வருஷம் ரூ.50,000 கல்வி உதவித்தொகை... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

click me!