ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க தடலாடி... நாடு முழுவதும் பிரதமர் மோடி பிறப்பித்த அவசர உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 25, 2021, 6:41 PM IST
Highlights

இப்படியான தீவிர நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி மேலும் ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளார். 
 

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்காமல் மக்கள் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுபாட்டை சரி செய்யும் விதமாக ராணுவம், விமானப்படை ஆகியனவும் களமிறங்கியுள்ளன. 

ஜெர்மனி, அரபு நாடுகள், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடம் இருந்து ஆக்ஸிஜர் கண்டெய்னர்களை இறக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் ஆக்ஸிஜன் விநியோகத்தை துரிதப்படுத்த மாநிலங்களுக்கிடையிலான ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்படியான தீவிர நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி மேலும் ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவின் படி  நாடு முழுவதும் 551 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்கள், பொது சுகாதார வளாகங்களில் அமைக்கப்படும். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை அங்கேயே உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்த மையங்கள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. 
 

click me!