இந்தியாவில் 3வது நாளாக தொடரும் கொடூரம்... கொரோனாவால் ஒரே நாளில் கொத்து கொத்தாய் மடியும் மக்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 25, 2021, 2:56 PM IST
Highlights

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 

கொரோனா 2வது அலை இந்தியாவை உலுக்கி எடுத்து வருகிறது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறித்து தினமும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3 லட்சத்து 49 ஆயிரத்து 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை 69 லட்சத்து 60 ஆயிரத்து 172 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 767 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது.தொற்றில் இருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 113 பேர் குணமடைந்துள்ளனர்.இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை 40 லட்சத்து 85 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 26 லட்சத்து 82 ஆயிரத்து 751 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் சதவிகிதம் 83.05% ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.13% ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் சிகிச்சை வெறுவோர் சதவிகிதம் 15.82% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 லட்சத்து 36 ஆயிரத்து 612 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதை அடுத்து,  நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 14 கோடியை 09 லட்சத்து 16 ஆயிரத்து 417 ஆக அதிகரித்துள்ளது

click me!