ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் ஒரே நாளில் பல்வேறு மாநிலங்களுக்கு 150 டன் ஆக்ஸிஜன் விநியோகம்..!

By karthikeyan VFirst Published Apr 24, 2021, 8:02 PM IST
Highlights

ஒரே நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 150 ரயில்கள் மூலம் 150 டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.
 

கொரோனா 2ம் அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவிவருகிறது. தேசியளவில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகிவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாவதால் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அட்மிட் ஆவோரின் எண்ணிக்கையும், ஆக்ஸிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த அவல சம்பவங்களும் அரங்கேறின. இந்நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அந்தவகையில், ஆக்ஸிஜன் விநியோகத்தை துரிதப்படுத்த இந்திய ரயில்வே ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கிவருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 டன் ஆக்ஸிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் நாசிக்(மகாராஷ்டிரா) மற்றும் லக்னோ(உத்தர பிரதேசம்) ஆகிய நகரங்களுக்கு திரவ மெடிக்கல் ஆக்ஸிஜன் டேங்கர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சில கண்டெய்னர்கள் நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களுக்கு சென்றன. 3வது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் லக்னோவிலிருந்து இன்று காலை புறப்பட்டது.  ஆந்திரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் அதிக ரயில்களை ஆக்ஸிஜன் விநியோகத்திற்கு பயன்படுத்துவது குறித்து ரயில்வே துறையுடன் பேசிவருகிறது.

இந்திய ரயில்வேயின் ரோ-ரோ சேவை மூலம் விசாகப்பட்டினம் மற்றும் பொக்காரோ ஆகிய நகரங்களுக்கும் ஆக்ஸிஜன் எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க, லக்னோ - வாரணாசி இடையே க்ரீன் காரிடார் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 270 கிமீ தொலைவை 4 மணி 20 நிமிடங்களில் கடக்க முடியும்.

ஆக்ஸிஜனை சாலை மார்க்கமாக எடுத்துச்செல்வதைவிட ரயில் மூலம் அதிவேகமாக எடுத்துச்செல்ல முடியும். அதேபோல 24*7 ரயில் டிரான்ஸ்போர்ட் செயல்படும் என்பதால் ஆக்ஸிஜனை நாடு முழுக்க கொண்டு சேர்ப்பதில் ரயில்வே துறை முக்கிய அங்கம் வகிக்கிறது.
 

click me!