“பினராயி விஜயன் தனது திறமையின்மையை மறைக்கிறார்..” மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சனம்..

Published : Oct 30, 2023, 02:50 PM ISTUpdated : Oct 30, 2023, 04:13 PM IST
 “பினராயி விஜயன் தனது திறமையின்மையை மறைக்கிறார்..” மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சனம்..

சுருக்கம்

பினராயி விஜயன் வகுப்புவாத வாதத்தை முன் வைப்பதன் மூலம் தனது திறமையின்மையை மறைக்கிறார் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடரப்போவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மிரட்டல் விடுத்த நிலையில், மத்திய அமைச்சர் அதற்கு பதிலளித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் சந்திரசேகர், தன்னை மதவாதி என்று கூறுவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். மேலும் கேரளாவில் தீவிரவாதி சக்திகள் வளர இடதுசாரிகளும், காங்கிரஸும் அனுமதிக்கின்றன என்றும் சந்திரசேகர் கூறினார்.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் “ ஊழல், போன்ற பிரச்னைகள் முன்வைக்கப்படும் போது, நாங்கள் வகுப்புவாதிகள் என்று கூறி அதை மறைக்க முயல்கின்றனர்.கேரளாவில் நடைபெறும் மாநாட்டில் ஹமாஸ் பிரதிநிதியை பேச அனுமதிப்பதில் காங்கிரசும் மவுனம் காக்கிறது. எனக்கு முதல்வர் பினராயி விஜயன் மீது அவநம்பிக்கை உள்ளது. பினராயி விஜயன் வகுப்புவாத வாதத்தை முன் வைப்பதன் மூலம் தனது திறமையின்மையை மறைக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முதல்வர் பினராயி விஜயன் ஆட்சியில், கேரளா தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகிறது. கோழிக்கோடு ரயில் எரிப்பு முயற்சியாக இருந்தாலும் சரி. பெரிய சேதம் ஏற்பட்டிருந்தால் பினராயி விஜயன் ஒரு ஐஎஸ்ஐஎஸ் அனுதாபி என்பது தெரியவரும் வரை, அது தீவிரவாதத்தை திட்டமிட்டு நடத்தும் முயற்சியாகும்.கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆகிய இரு கட்சிகளும் தீவிரவாத சக்திகளை திருப்திப்படுத்திய வரலாறு உண்டு. எனக்கு அனைத்து மதத்தினருடனும் நல்லுறவு உள்ளது. ஹமாஸின் கொடூரமான கொலைகள் மற்றும் அதன் மீதான அமைதி குறித்து நான் கேள்வி எழுப்பினேன். " என்று தெரிவித்தார்.

 

முன்னதாக நேற்று கேரள மாநிலம் களமச்சேரியில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு சிறுமி உள்ளிட்ட 3 பெண்கள் உயிரிழந்தனர், 30- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தீவிரவாத தாக்குதல் என்று  மத்திய அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். தனது  X சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர் "ஒரு மதிப்பிழந்த முதல்வர் பினராயி விஜயன் அபிமான அரசியல் செய்கிறார். டெல்லியில் அமர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்துவது, கேரளாவில் பயங்கரவாத ஹமாஸ் ஜிஹாத் என்ற வெளிப்படையான அழைப்புகள் மூலம் அப்பாவி கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்களையும் குண்டுவெடிப்புகளையும் ஏற்படுத்துகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்..

கேரளாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு.! வெடிகுண்டு தயாரித்து இயக்கியது எப்படி.? டொமினிக் மார்ட்டின் வாக்குமூலம்

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், களமசேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மதவெறிக் கருத்துக்களை பரப்பிய மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!