தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 30 ஆம் தேதி நடக்கிறது. 119 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் வலுவாக இருக்கும் பாரத ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் களம் காணுகின்றன. ஆந்திராவில் வலுவாக இருக்கும் சந்திராபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கானா சட்டசபை தேர்தலில் இந்த முறை போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் முதன் முறையாக தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை சந்திரபாபு நாயுடு எடுத்து இருக்கிறார். நேற்று கூடிய கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பை கட்சியின் மாநிலத் தலைவர் கசனி ஞானேஸ்வர் வெளியிட்டுள்ளார். இவரது அறிவிப்புக்குப் பின்னர் கட்சியினர் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கட்சி தலைவர் கசனியும் அறிவிப்புக்குப் பின்னர் கண் கலங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது.
2ஜி மேல்முறையீட்டு வழக்கு: நாளை தீர்ப்பு தேதி?
தனது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, தற்போது ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தல் பணிகளில், பிரச்சாரங்களில் ஈடுபட முடியாது. ஆலோசனையும் வழங்க முடியாது என்ற காரணத்தினால், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் பாஜகவை சந்திரபாபு நாயுடு கட்சி ஆதரிக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. ஏற்கனவே ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் சந்திரபாபு நாயுடு கைக்கோர்த்து இருக்கும் நிலையில், தெலுங்கானாவில் வேறு முடிவை எடுத்துள்ளார். தெலுங்கானா தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பது என்ற நிலைப்பாட்டை பவன் கல்யாண் கட்சி எடுத்து இருக்கிறது. பாஜகவிடம் 10 முதல் 12 இடங்களை கேட்டுப் பெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
என்னை வகுப்புவாதி என்று சொல்ல முதல்வருக்கு என்ன தகுதி! - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
சிறையில் சந்திரபாபு நாயுடு இருக்கும்போது தெலுங்கானா தேர்தலில் போட்டியிட்டால் மோசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்றும் இது ஆந்திராவில் 2024ஆம் ஆண்டு தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் இந்த முடிவை தெலுங்கு தேசம் கட்சி எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் ஜன சேனாவுக்கு பெரிய அளவில் வாக்குகள் இல்லாவிட்டாலும், பாஜகவைச் சேர்ந்த தொண்டர்களும், ஆதரவாளர்களும் வாக்களிப்பாளர்கள் என்று பவன் கல்யாண் நம்புகிறார். அதேசமயம், தெலுங்கானாவில் பெரிய அளவில் பவன் கல்யாணை பாஜக நம்புகிறது என்ற பேச்சும் அடிபடுகிறது. தெலுங்கானாவில் பெரிய அளவில் பவன் கல்யாண் கட்சிக்கு ஆதரவு இல்லை. அமைப்பு ரீதியிலும் வலுவாக இல்லை என்றே கூறப்படுகிறது. பவன் கட்சியுடன் ஒப்பிடும்போது பாஜகவுக்கு தெலுங்கானா மாநிலத்தில் செல்வாக்கு இருக்கிறது. இந்த நிலையில், பவன் கல்யாணை சிறப்பு விமானம் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து பேசுவது எந்தளவிற்கு வாக்கு வங்கியை உயர்த்தப் போகிறது என்பதை தேர்தல் முடிவுகள்தான் காட்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.