உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளரின் பேரணியில் திருடர்கள் கைவரிசை காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், பாஜக வேட்பாளர் அருன் கோவிலின் தேர்தல் பிரசார வாகன பேரணி உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்றது. இந்த பேரணியில் திருடர்கள் கைவரிசை காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பர்சுகள், 24க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடர்கள் திருடியுள்ளனர்.
குறிப்பாக, ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.36,000 பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக வேட்பாளருக்கு பிரசாரம் செய்ய வந்த நபர்கள் தொழிலதிபர் ஒருவரிடம் இரு கைகளை உயர்த்தி 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, அவரும் அவர்களுடன் சேர்ந்து இரு கைகளை உயர்த்தி 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிட்ட போது அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.36,000 பணத்தை திருடர்கள் பிக்பாக்கெட் அடித்துச் சென்றனர்.
के व्यापारी कुलभूषण जी की दुकान के सामने से भी रोड शो गुजारा. दुकान पर अच्छे- भले बैठे थे.
टीवी वाले रामजी को देखा तो जोश में प्रभु को प्रणाम करने दुकान से उतर गए.
जेब में 36 हजार रुपए थे. जैसे ही जयश्रीराम का नारा लगाया.
जेब कट गई और पैसा गायब pic.twitter.com/sIeej8Xs7H
உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளரின் பேரணியில் திருடர்கள் கைவரிசை காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் கொலை தொடர்பாக பொய்யான தகவல்.!! அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.. அதிரடியாக வீடியோ வெளியிட்டு பதிலடி