கர்நாடக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ‘சொம்பு’ கிளப்பிய சர்ச்சை வார்த்தைப் போராக வெடித்துள்ளது.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே வெற்று குவளை, அதாவது காலி சொம்பு விளம்பரம் தொடர்பாக பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. மத்திய பாஜக தலைமையிலான NDA அரசாங்கம் மாநில அரசுக்கு 'சொம்பு' (காலி பானை/குவளை) தவிர வேறெதையும் வழங்கவில்லை என்பதை இந்த விளம்பரம் குறிக்கிறது.
ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சித் தலைவர் எச்.டி.தேவேகவுடா ஒரு பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியின் பக்கத்தில் அமர்ந்திருப்பது போல், அவரது கையில் ஒரு செய்தித்தாளையும், அதன் முதல் பக்கத்தில் காங்கிரஸின் வெற்று குவளை விளம்பரமும் காட்டப்பட்டதை அடுத்து, வார்த்தைப் போர் வெடித்தது. கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடி மற்றும் தேவகவுடா ஆகியோரின் எடிட் செய்யப்பட்ட படத்தை X இல் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
undefined
அவரைத் தொடர்ந்து அவரது துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பகிர்ந்து மேலும் பரபரப்பை உண்டாக்கினார். இதற்கு பாஜக உடனடியாக பதில் அளித்தது. அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், சித்தராமையா 2013 இல் 'காலி சொம்பு' வைத்திருக்கும் எடிட் செய்யப்பட்ட படத்தையும், 2023 இல் ஒன்றும் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 20) பெங்களூரில் காலி குவளைகளுடன் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. காங்கிரஸ் எம்.பி.யும் கட்சியின் பொதுச் செயலாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா, போராட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்தார். கன்னடர்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பதற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசை சாடினார்.
செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜேவாலா, "கன்னடர்கள் தங்களின் உரிமையைக் கோருகிறோம். நாங்கள் அரசுக்கு 100 ரூபாய் கொடுக்கிறோம், கன்னடியர்களுக்கு 13 ரூபாய் மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. அவர்கள் சொந்த வரியில் பங்கு கேட்கும் போது, மோடி அவர்களுக்கு சொம்பு கொடுக்கிறார்.
வறட்சி ஏற்படும் போது, மாநிலத்தில் ஆறு மாதங்களாக, கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நமது விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரூ.17,400 கோடி வறட்சி நிவாரணத் தொகையைக் கேட்கிறது. மோடி ஜி எங்களுக்கு சொம்பு கொடுக்கிறார்” என்று கூறினார்.
"6.5 கோடி கன்னடர்களும் அதே குவளையை பாஜக கட்சிக்குக் கொடுப்பார்கள். வரும் லோக்சபா தேர்தலில் இந்த குவளைகளை எல்லாம் கொடுத்து வீட்டுக்கு அனுப்புவார்கள்" என்று சுர்ஜேவாலாவின் ட்வீட் கூறுகிறது. நடப்பு 2024 மக்களவைத் தேர்தல்களின் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் கர்நாடகாவில் நடைபெறவுள்ளது. தென் மாநிலத்தில் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?