Military : ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகள்.. இந்தியாவிற்கு எந்த இடம்? SIPRI ரிப்போர்ட் சொல்வதென்ன?

By Ansgar R  |  First Published Apr 23, 2024, 9:18 AM IST

Military Spender : ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) நேற்று திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், உலக அளவில் ராணுவத்திற்கு அதிக பணத்தை செலவிடும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.


Stockholm International Peace Research Institute (Sipri) வெளியிட்ட அந்த அறிக்கையின்படி 2023 ஆம் ஆண்டில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக 83.6 பில்லியன் டாலர் அளவிற்கு செலவு செய்து இந்தியா உலகின் நான்காவது பெரிய இராணுவ செலவீன நாடக திகழ்கின்றது என்று கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பட்டியல் இதேபோலத்தான் உள்ளது.

அதே போல இந்தியாவின் செலவினம் முந்தைய ஆண்டை விட 4.2% அதிகம் என்று உலக ராணுவச் செலவு குறித்த அந்த அறிக்கை கூறியுள்ளது. மே 2020ல் தொடங்கிய லடாக் மோதலுக்குப் பிறகு, திறன்கள் மற்றும் பிற போர் அமைப்புகள் வலுப்படுத்தும் வகையில், இந்தியா தனது பாதுகாப்புத் திறனை வளர்த்துக்கொள்வதிலும், ராணுவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகின்றது.

Tap to resize

Latest Videos

முஸ்லிம்களுக்கு பாஜக என்ன செய்தது: பிரதமர் மோடி விளக்கம்!

இந்த விஷயத்தில் கடந்த ஆண்டு SIPRI அறிக்கையின்படி, 2022லும் தனது ராணுவத்திற்கு செலவு செய்வதில் இந்தியா நான்காவது பெரிய நாடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2022ல் இந்தியாவின் இராணுவச் செலவு 81.4 பில்லியன் டாலராக இருந்தது, இது 2021ல் இருந்ததை விட 6% அதிகமாகவும், 2013ல் இருந்ததைவிட 47% அதிகமாகவும் இருந்தது.

நேற்று வெளியான SIPRI தரவுகளின்படி, உலகின் இரண்டாவது பெரிய இராணுவச் செலவீனமான சீனா, 2023 ஆம் ஆண்டில் அதன் இராணுவத்திற்கு சுமார் $296 பில்லியன் ஒதுக்கியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 6% அதிகமாகும். "சீனாவின் பல அண்டை நாடுகள் தங்கள் சொந்த செலவின அதிகரிப்பை சீனாவின் இராணுவ செலவினங்களுடன் இணைத்துள்ளன" என்றும் அந்த அறிக்கை கூறியது. 2022ல், சீனாவின் இராணுவச் செலவு 292 பில்லியன் டாலர்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.

மே 2000 முதல் கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியாவும் சீனாவும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் சமீபத்திய அறிக்கை வந்துள்ளது, மேலும் எல்லைப் பதட்டத்தைத் தணிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க இரு தரப்பினரும் 21 சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த பிப்ரவரி 1 அன்று, 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினங்களுக்காக இந்தியா 6.21 லட்சம் கோடியை ஒதுக்கியது நினைவுகூரத்தக்கது. கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட சற்றே குறைவாக ஒதுக்கீடு (0.37%) மற்றும் 2023-24 பட்ஜெட் மதிப்பீட்டில் இருந்ததை விட 4.72% அது அதிகமாகும்.

2024-25 ஆம் ஆண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.89% இந்த ஆண்டு பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டமாகும். பட்ஜெட்டில் வருவாய் செலவு 2.82 லட்சம் கோடியும், மூலதன செலவு 1.72 லட்சம் கோடியும், ஓய்வூதிய செலவு 1.41 லட்சம் கோடியும் அடங்கும். ஆயுதப் படைகளின் நவீனமயமாக்கலுக்கான மூலதனச் செலவு கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 9.39% அதிகமாகவும், 2023-24க்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது 5.78% அதிகமாகவும் உள்ளது.

புதிய SIPRI அறிக்கை, 2023ல் மொத்த உலக ராணுவச் செலவினம் 2443 பில்லியன் டாலர்களை எட்டியது, இது 2022ல் இருந்து 6.8% அதிகரித்துள்ளது. "இது 2009க்குப் பிறகு ஆண்டுக்கு ஆண்டு செங்குத்தான அதிகரிப்பு" என்று அது கூறியது, அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் உலகளாவிய பாதுகாப்பின்மை மற்றும் போருக்கு மத்தியில் இந்த இராணுவச் செலவுகள் அதிகரித்துள்ளது. 

ஒரு சொம்புக்கு போரா.. கர்நாடகா மாநிலத்தில் வெடித்த சொம்பு அரசியல்.. பாஜக Vs காங்கிரஸ் மோதல்.. ஏன்?

click me!