
அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலை பிரபல நாளிதழான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 73 % பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் 73 % மக்கள் அரசாங்கம் மீது அதிக நம்பிக்கையை கொண்டிருப்பதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவுக்கு அடுத்ததாக கனடா 62% பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. துருக்கி 58%, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.
வல்லரசு நாடு என மார்தட்டி கொள்ளும் அமெரிக்கா பெற்றிருப்பது வெறும் 30 சதவீதம் தான். அமெரிக்கா இந்த பட்டியலில் 10 வது இடம் வகிக்கிறது. 13 சதவீதத்துடன் இந்த பட்டியலில் கிரீஸ் கடைசி இடம் வகிக்கிறது