நிம்மதி... நிம்மதி... மிகப்பெரிய நிம்மதி….பழைய தங்க நகைகள், டூவீலர், கார்கள் விற்பனைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை

First Published Jul 14, 2017, 8:10 AM IST
Highlights
no gst for old cars

நிம்மதி... நிம்மதி... மிகப்பெரிய நிம்மதி….பழைய தங்க நகைகள், டூவீலர், கார்கள் விற்பனைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை

பழைய தங்க நகைகள், பைக், கார் உள்ளிட்டவற்றை தனி மனிதர்கள்  விற்பனை செய்தால் அதற்கு ஜி.எஸ்.டி. வரி ஏதும் விதிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

பழைய தங்க நகைகள், பைக், கார் ஆகியவற்றின் விற்பனைக்கு ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்படும் என செய்திகள் பரவிய நிலையில் இந்த விளக்கத்தை மத்திய வருவாய்துறை அளித்துள்ளது. 

இது குறித்து மத்திய வருவாய்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா நிருபர்களுக்கு நேற்று அளித்த  பேட்டியில் கூறியதாவது-
தனி மனிதர்கள் தங்களின் பழைய தங்க நகைகளை, நகைக்கடைக்காரரிடம் விற்பனை செய்யும் போது, நகைக்கான 3 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது. ஏனென்றால், தனி மனிதர்கள் தொழில்முறை வர்த்தகமாக பழைய தங்கநகைகளை விற்பனை செய்யவில்லை. சுயதேவைக்காக மட்டுமே தங்க நகைகளை விற்பனை செய்கிறார்கள். ஆதலால், மத்திய அரசு ஜி.எஸ்.டி.சட்டம் பிரிவு 9(4)ன்கீழ் தனிநபர்கள் விற்பனை செய்யும் தங்க நகைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது. 

அதேசமயம், ரிவர்ஸ் சார்ஜ் விதிகளின்படி, தனி நபர்களிடம் இருந்து பழைய தங்க நகைகளை வாங்கும் தங்க நகைக்கடைக்காரர் ஜி.எஸ்.டி. வரி 3 சதவீதத்தை செலுத்த வேண்டும். 

இதை நடைமுறையே பழைய கார், பைக் ஆகியவற்றை விற்பனை செய்யும் போது, ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது எனத் தெரிவித்தார். 

tags
click me!