நடுவானில் எமர்ஜென்ஸி கதவை முயன்ற பயணி.. டெல்லி - சென்னை விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

By Ramya s  |  First Published Sep 20, 2023, 11:28 AM IST

டெல்லியிலிருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி அவசர கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 


டெல்லி-சென்னை இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் அவசரக் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் புதன்கிழமை அதிகாலை விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார். செவ்வாய்க்கிழமை இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 6341 இல் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மணிகண்டன் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் சென்னை விமான நிலையம் வந்தடைந்ததும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இண்டிகோ அதிகாரிகள் அந்த நபர் மீது புகார் அளித்துள்ளனர், மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் சம்பவம் குறித்து சிஐஎஸ்எஃப் அதிகாரிகளிடம் விமான அதிகாரிகள் விளக்கம் அளித்து, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Tap to resize

Latest Videos

ரூ.3,100 கடனை செலுத்தாத காய்கறி வியாபாரியை நிர்வாண ஊர்வலம் அழைத்து சென்ற கொடுமை.. அதிர்ச்சி வீடியோ

இண்டிகோ நிறுவனம் இதுகுறித்து சிஐஎஸ்.எஃப் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில் ", எங்கள் விமானத்தில் அவசரகால எமர்ஜென்ஸி கதவை திறக்க முயன்ற ஒரு பயணியை அடையாளம் எங்கள் குழுவின அடையாளம் கண்டுகொண்டனர். எனவே நடைமுறையின்படி, நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம். அந்த பயணியை காவல்நிலையம் அழைத்துச் செல்ல CISF அதிகாரிகளை ஒதுக்குமாறு உங்கள் குழுவைக் கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானத்தில் அவசரகால கதவை திறக்க முயல்வது இதுமுதன்முறையல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு ஜூலை மாதம், ஏர் பிரான்ஸ் 194 விமானத்தின் பின்பக்க இடதுபுற அவசரக் கதவை நடுவானில் திறக்க முயன்றதாகக் கூறப்படும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபர் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்டார். இருப்பினும், வெங்கட் மோஹித் ஆச்சாரி என்ற பயணி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த மற்றொரு சம்பவத்தில், டெல்லி-பெங்களூரு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 40 வயது பயணி ஒருவர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார். விமான நிறுவனங்களின் கூற்றுப்படி, அந்த பயணி குடிபோதையில் இருந்ததால், விமான அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டார். பெங்களூரு வந்தவுடன் அவர் CISF குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!