மே 9, 10 ஆம்தேதிகளில் ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து... எந்த பாதையில் தெரியுமா? விவரம் உள்ளே!!

Published : May 09, 2023, 07:24 PM IST
மே 9, 10 ஆம்தேதிகளில் ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து... எந்த பாதையில் தெரியுமா? விவரம் உள்ளே!!

சுருக்கம்

மே.9,10 ஆகிய தேதிகளில் அரக்கோணம் - காட்பாடி வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.  

மே.9,10 ஆகிய தேதிகளில் அரக்கோணம் - காட்பாடி வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மே ஒன்பதாம் தேதி மற்றும் பத்தாம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் அரக்கோணம் - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மேலப்பாக்கம் மற்றும் மகேந்திரவாடி ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கோவையில் ஓடும் பேருந்தில் இருந்து வெளியேறிய புகையால் ஓட்டம் பிடித்த பயணிகள்

இது குறித்து ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் கோவை- சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண் 12680) வரும் மே 9, மே 10 ஆகிய தேதிகளில் காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.

இதையும் படிங்க: கோவையில் தென்னையை பதம் பார்த்து, இளநீரை ருசி பார்த்த ஒற்றை காட்டு யானை

இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண் 12679) வரும் மே 9, மே 10 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே இயக்கப்படாது. மாறாக காட்பாடியில் இருந்து இருந்து புறப்பட்டு கோவை ரயில் நிலையம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!