குளிர்காலக் கூட்டத்தொடர் கூடவுள்ளதையொட்டி, நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் 15 அமர்வுகள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தொடரில் 18 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரிக்கு மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் விதிகளை நீட்டிப்பதற்கான இரண்டு சட்டங்கள், குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள் உட்பட 18 மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் டிசம்பர் 2ஆம் தேதியன்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் டிசம்பர் 2 ஆம் தேதி காலை 11 மணிக்குப் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030க்குள் தமிழகத்தில் எச்.ஐ.வி இல்லாத நிலை: முதல்வர் ஸ்டாலின் சூளுரை!
முன்னதாக, சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்பது நாட்டின் சட்டம். இந்தச் சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.