கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தரை மீண்டும் நியமிக்க முதல்வர் பினராயி விஜயன் அழுத்தம் கொடுப்பதாக அம்மாநில ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்
கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கோபிநாத் ரவீந்திரனை மீண்டும் நியமிக்க முதல்வர் பினராயி விஜயன் அழுத்தம் கொடுப்பதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், கோபிநாத் ரவீந்திரனை மீண்டும் நியமனம் செய்ய மாநில உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்துவை முதல்வர் பினராயி விஜயன் பயன்படுத்துவதால் குற்றம் சாட்ட வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ரவீந்திரனை மீண்டும் நியமித்த கேரள அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், ஆளுநர் இதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
முடங்கிக் கிடக்கும் டி.என்.பி.எஸ்.சி: தலைவரை நியமிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ரவீந்திரனை மீண்டும் நியமித்ததை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கேரள உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் கடந்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி தள்ளுபடி செய்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ரவீந்திரனை மீண்டும் நியமித்த அறிவிப்பு தள்ளி வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கேரளாவில் உள்ள கண்ணூர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் கோபிநாத் ரவீந்திரன். கோபிநாத் ரவீந்திரன் பதவிகாலம் முடிந்தநிலையில் மீண்டும் அவரை அதே பதவியில் நியமிக்குமாறு மாநில அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து அவரை மீண்டும் துணை வேந்தராக ஆளுநர் ஆரிப் முகமது கான் நியமனம் செய்தார். இந்த விவகாரத்தில் மாநில அரசு தனக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். மேலும், மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து இது தொடர்பாக பரிந்துரை கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியானது.
அதேசமயம், பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ரவீந்திரன் கோபிநாத்தை மீண்டும் துணை வேந்தராக நியமித்தது பல்கலைகழக விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.