காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொல்ல இந்தியா சதி செய்ததாகக் கூறப்படும் கேள்விகளுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம், இது ‘கவலைக்குரிய விஷயம்’ என்று கூறியது. மேலும், குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீதிக்கான சீக்கியர்கள் எனும் காலிஸ்தானி அமைப்பை வழிநடத்தும் குர்பத்வந்த் சிங் பன்னூனைக் படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தா மற்றும் சிலருடன் சேர்ந்து இந்திய அரசு ஊழியர் ஒருவர் பணியாற்றினார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
undefined
“அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு தனிநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரை இந்திய அதிகாரி ஒருவருடன் இணைத்ததாகக் கூறப்படுவது கவலைக்குரிய விஷயம். இதுவும் அரசாங்கக் கொள்கைக்கு முரணானது என்று நாங்கள் கூறியுள்ளோம்.” என அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
“சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், கடத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையேயான தொடர்பு சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு ஒரு தீவிரமான பிரச்சினையாகும். அதனால்தான் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கையின்படி, நாங்கள் செயல்படுவோம்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பாதுகாப்பு விஷயங்களில் எந்த தகவலையும் பகிர முடியாது என கூறி, மேலதிக தகவல்களை கூற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி மறுப்பு தெரிவித்து விட்டார்.
முதல்வர் பினராயி விஜயன் பிரஷர் போடுறாரு: ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு!
கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருடன் குர்பத்வந்த் சிங் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். கடண்டஹ் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் குர்பத்வந்த் சிங் பன்னூன் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும் எனவும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்
தாக்குதல் நடத்துவோம் எனவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தவர்தான் இந்த குர்பத்வந்த் சிங் பன்னூன்.
அதன் தொடர்ச்சியாக, காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல இந்தியா சதி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் வைத்திருக்கிறார்.