Parliament Budget Session 2023:நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ல் தொடக்கம்: 66 நாட்கள் நடக்கிறது

By Pothy RajFirst Published Jan 13, 2023, 1:36 PM IST
Highlights

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்கி, 66 நாட்கள் அதாவது ஏப்ரல் 6ம் தேதி முடிகிறது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்கி, 66 நாட்கள் அதாவது ஏப்ரல் 6ம் தேதி முடிகிறது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்போது இருஅவைகளையும் ஒன்றாகக் கூடி மத்திய கூட்ட அரங்கில் முதல்நாளில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுவார்.  குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவிக்கு வந்தபின் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். 

காவிக் கொடி ஆர்எஸ்எஸ் கொள்கையின் அடையாளம்: மோகன் பகவத் பேச்சு

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்து வெற்றிகரமாகத் தாக்கல் செய்யும் 5வது மற்றும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வந்துவிடும் என்பதால் அப்போது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. ஆதலால், இதுவே மோடி அரசின் கடைசி பட்ஜெட்டாகும்.

ஆதலால், பட்ஜெட்டில் தேர்தலை கருத்தில் கொண்ட சலுகைகள், மாத வருமானம் ஈட்டுவோர், வரிக்குறைப்பு போன்றவை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து மத்தியஅமைச்சர் பிரகலாத் ஜோஷி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது, ஏப்ரல் 6ம் தேதிவரை நடக்கிறது.66 நாட்களில் 27 அமர்வுகள் நடக்கின்றன. குடியரசுத் தலைவர் உரைக்குப்பின் நன்றி தெரிவிக்கும் விவாதம், மத்திய பட்ஜெட் உள்ளிட்டவை தொடர்ந்து வர உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக செய்ய வேண்டும்: முக்கியமான அறிவிப்பு!

பிப்ரவரி 14 முதல் மார்ச் 12ம் தேதிவரை நாடாளுமன்ற நிலைக்குழு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பகுதியில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் விரிவாக நடக்கும்.

குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிப்பார். பட்ஜெட் பற்றிய விவாதத்திலும், கேள்விகளுக்கும் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிப்பார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பாதியில், பல்வேறு அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடக்கும். இந்தக் கூட்டத்தொடரின்போது நிதிமசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்
 

click me!