
புராண காலத்தில் தன்னார்வ பணியாளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழந்தவர் கடவுள் அனுமன், வரலாற்றுக் காலத்தில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜ் திகழ்ந்தார் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பால் ஸ்வயம்சேவக் முன் பேசியதாவது:
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்!!
ஆர்எஸ்எஸ் நிறுவனர்கள் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார், மூத்த தலைவர்கள் கோல்வால்கர், பாலசாஹேப் தியோரா ஆகியோர் சமரசமில்லாமல் சேவை செய்துள்ளனர். காவிக் கொடி என்பது தனிப்பட்ட நபருக்கானது அல்ல, நாக்பூரை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் தொண்டர்களின்அடையாளம், முன்மாதிரியாகும்.
காவிக் கொடி என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை விளக்குகிறது, நமது லட்சியங்கள் தத்துவ அடிப்படையில் உள்ளன, தத்துவத்தின் அடையாளம் காவிக் கொடி
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக செய்ய வேண்டும்: முக்கியமான அறிவிப்பு!
ஒருநபரை நீங்கள் வாழ்க்கையின் முன்மாதிரியாக வைக்க விரும்பினால், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 3 பேரை உதாரணமாகவைக்கக் கூறியுள்ளனர். தன்னார்வத் தொண்டுக்கு புராண காலத்தில் உதாரணமாக இருந்தவர் கடவுள் அனுமன், வரலாற்று காலத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகராஜ் திகழ்ந்தார்.
வழக்கமான கூட்டங்கள் மூலம் தங்களின் தன்னார்வலர்கள் தங்களை திருப்தி செய்து கொள்ள முடியாது, தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னார்வலர்கள் செயல்பாட்டால் நான் ஈர்க்கப்பட்டேன்.பதின்வயதில், தன்னார்வலராக இருந்து நாட்டுக்கு சேவை செய்ய வந்தேன்.
தேசத்துக்கு சேவை செய்வதன் மூலம் தன்னார்வலர்களை தகுதியான மனிதர்களாக, சமகால வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். அனுமனின் தகுதிகள், மதிப்புகளை தன்னார்வலர்கள் உணர வேண்டும்.
இந்தியாவை உலகிற்கு ஞானத்தை நாடாக மாற்ற நாம் முன்வர வேண்டும். எல்லோரும் சேர்ந்து கூட்டாக உழைத்தால், வரும் தலைமுறையினர் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல முடியும்
இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்