உத்தரப்பிரதேசம் வாரணாசியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார்க் வரை 27 நதிகள் வழியே பயணிக்கும் உலகிலேயே மிக நீண்ட நதி வழிப் பயணத்துக்கான கங்கா விலாஸ் சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார்க் வரை 27 நதிகள் வழியே பயணிக்கும் உலகிலேயே மிக நீண்ட நதி வழிப் பயணத்துக்கான கங்கா விலாஸ் சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்
27 நதிகள் வழியாக 51 நாட்கள் பயணித்து, 3200 கி.மீ செல்லும் இந்த எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல் வங்கதேசம் வழியாகச் சென்று அசாம் சென்றடையும். இந்த சொகுசு கப்பலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் 50 விதமான சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க உள்ளனர்.
51 நாட்கள் நதியில் பயணிக்கும் சொகுசு கப்பல்: 13ம்தேதி பிரதமர் மோடி தொடக்கம்
எம் வி கங்கா விலாஸ் கப்பல் 3 அடுக்குகளைக் கொண்ட சொகுசு கப்பலாகும். 80 பயணிகள் வரை பயணிக்கும் இந்த கப்பலில் 18விதமான சூட்கள் உள்ளன. இந்த கப்பலில் பயணிக்க ஒரு பயணி ஒருவருக்கு ரூ.13 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வாரணாசியில் இருந்து இன்று(13ம்ததேதி) புறப்பட்ட கங்கா விலாஸ் சொகுசு கப்பல் 51 நாட்கள் பயணித்து மார்ச் 1ம் தேதி திப்ருகார்க் சென்றடையும்.
இந்த எம்வி கங்கா விலாஸ் கப்பல் பயணத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
கங்கா விகாஸ் கப்பலில் ஒரு ஜாலியான பயணம்! நீங்க ரெடியா!
கங்கை நிதியில் உலகிலேயே மிகவும் நீண்ட நதிவழிப் பயணத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இந்திய சுற்றுலாவுக்கு புதிய தொடக்கத்தை இந்த எம்வி கங்கா விலாஸ் கப்பல் ஏற்படுத்தும்.
எம்வி கங்காவில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளிடம் நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் கற்பனை செய்து பார்த்த அனைத்தும் இந்தியாவில் உள்ளது. உங்கள் கற்பனைத் திறனுக்கு அப்பாற்பட்டும் இந்தியாவில்உள்ளது. இதயத்திலிருந்து அனுபங்களை இந்தியாவில் இருந்துதான் பெற முடியும், ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் இந்தியா இதயத்தை மதங்களைக் கடந்து திறந்த மனதுடன் வரவேற்கிறது.
இந்த புதிய பயணம் உலகச் சுற்றுலா வரைபடத்தில் எங்கள் நாட்டின் சில இடங்கள் இடம்பெற இந்தப் பயணம் துணையாக இருக்கும்.
இந்த கங்கா விலாஸ் சுற்றுலாக் கப்பல் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், சுற்றுலா வளர்ச்சி அடையும். இந்தியாவின் நிலை எவ்வாறு இருந்தாலும் கங்கை தாய் மக்களை வளர்த்தெடுத்துள்ளார்.
கங்கை நிதி எங்களுக்கு சாதாரண நிதி அல்ல, இந்தியாவின் வரலாற்றில் தனி இடம் கங்கைக்கு இருக்கிறது. புதிய கண்ணோட்டத்துடன் கங்கை சுத்தம் செய்யும் இயக்கத்தை தொடங்கியுள்ளோம்
இந்த திட்டம் மட்டுல்லாமல் ரூ.1000 கோடிக்கு, பல்வேறு நீர்வழித் திட்டங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டுகிறோம். இதன் மூலம் வர்த்தகம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை கிழக்கு இந்தியாவில் ஏற்படுத்த முடியும்
இந்தியாவில் சுற்றுலாவின் வளர்ச்சிக் கட்டம் தொடங்கும் நேரத்தில், சொகுசு கப்பல் சுற்றுலா மற்றும் பாரம்பரிய சுற்றுலாவின் இணைவு நடக்கிறது.
நீர்வழியைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். 3200 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் எம்விகங்கா விலாஸ் நதி பயணம் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் வளர்ச்சிக்கு வாழும் உதாரணமாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பில் இந்தியா நிகரில்லாத வளர்ச்சியைக் அடைந்து வருகிறது, நீர்வழிகள் மூலம் சரக்கு போக்குவரத்து கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்