வண்டியை எங்கு நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்..போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சி.. முடிவை மாற்றிய அரசு..

Published : Mar 17, 2022, 08:19 PM IST
வண்டியை எங்கு நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்..போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சி.. முடிவை மாற்றிய அரசு..

சுருக்கம்

புதுச்சேரி நகரப்பகுதிகளில் வாகனங்களை சாலைகளில் எங்கு நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க டெண்டர் கோரப்படட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி நகர்பகுதி :

புதுச்சேரி நகரப்பகுதிகளில் வாகனங்களை சாலைகளில் எங்கு நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க டெண்டர் கோரப்படட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியில் அதிகரித்து வரும் வாகன நெரிசல் காரணமாக, நகர் பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகங்களுக்கு  பார்க்கீங் கட்டணம் வசூலிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்து,  அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. மேலும் இதில் ஒவ்வொரு வீதிக்கும் ஒரு கட்டணம் எனும் அடிப்படையில்,  நிர்ணயிக்கப்பட்டது. அதற்கான முன்வைப்பு தொகை அறிவிக்கப்பட்டது. அதை போல், டெண்டர் கோர உள்ளோருக்கு மின்னணு ஏலம் வரும் 25-ல் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

மேலும் பார்க்கீங் கட்டணம் வசூலிப்பது தொடர்பான டெண்டர், வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி அடுத்தாண்டு மார்ச் 31 வரை அதனை எடுப்பவரிடம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக அரவிந்தர் ஆசிரமம், மணணக்குள விநாயகர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள், அண்ணாசாலை, நேரு வீதி,புதிய பஸ்நிலையம், பழைய துறைமுகச்சாலை என நகரில் எங்கு நிறுத்தினாலும் கட்டணம் இதன்மூலம் வசூலிக்கப்படும் என்று இறுதி செய்யப்பட்டது. 

மேலும் படிக்க: புதிய கல்வி கொள்கை பிரச்சனை இல்லை..ஆனால்..! இது மட்டும் வேண்டாம்.. அமைச்சர் பொன்முடி வெளிப்படை..

கூட்டணி கட்சி எதிர்ப்பு:

ஆனால் இந்த புதிய நடைமுறைக்கு தற்போது புதுச்சேரி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் சாமானிய மக்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் வாகன நிறுத்தம் கட்டண வசூல் உத்தரவை முதலமைச்சர் மக்களின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

சிறிய நகர பகுதியான புதுச்சேரியில், அடுத்தடுத்த வீதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் ஒவ்வொரு வீதிக்கும் வாகன நிறுத்த கட்டணம் செலுத்த முடியுமா என்று கேள்வியெழுப்பினர்.மேலும் ஏழை தொழிலாளர்கள் நாள்தோறும் தங்கள் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டால் அவர்களின் சம்பளமாக என்ன மிஞ்சும்..? எனவே இந்த டெண்டர் அறிவிப்பை புதுவை நகராட்சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

மேலும் படிக்க: ஹாப்பி நியூஸ்.. இனி Ph.D. படிக்க P.G தேவையில்லை..புதிய நடைமுறையின் சிறப்பு அம்சங்கள்..முழு விவரம்..

பார்க்கிங் கட்டணம் வசூல்:

புதுச்சேரி நகர பகுதியின் தற்போதைய சாலை உட்கட்ட அமைப்பில் உள்ள குளறுபடிகளால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் தினந்தோறும் அல்லல்படுகின்றனர். ஏற்கனவே விதிக்கப்படும் கேளிக்கை வரி, கேபிள் டிவி வரி, நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடைகள், நகர்ப்புற வளர்ச்சி வரி, உள்ளிட்ட பல வரிகள் மூலம் திரட்டப்படுகின்ற வரியை முறைப்படுத்தி வசூலித்தாலே நகராட்சிக்கு அதிகப்படியான வரியின் மூலம் நிதி கிடைக்கும் என்று தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் இந்த புதிய நடைமுறைக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரில் நகர பகுதிகளில் சாலையோரமாக எங்கு வாகனத்தை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: மகிழ்ச்சி செய்தி..மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்வு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியீடு..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏழை மாணவர்கள் படிக்கட்டும்.. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த பக்தர்!
இந்தியாவுல இல்லப்பா.. துபாய்ல இருக்கேன்! ஓஸ்மான் ஹாதி கொலைக் குற்றவாளி வெளியிட்ட வீடியோவால் போலீஸ் அதிர்ச்சி!