PMLA: உச்ச நீதிமன்றம் வழங்கியது ஆபத்தான தீர்ப்பு: அமலாக்கப்பிரிவு அதிகாரம் பற்றி 17 எதிர்க்கட்சிகள் அறிக்கை

By Pothy Raj  |  First Published Aug 3, 2022, 4:50 PM IST

சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் 2019ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் சரியானது என்பதை உறுதி செய்து அமலாக்கப்பிரிவுக்கு அதிகமான அதிகாரம் வழங்கி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு அபாயகரமானது என்று எதிர்க்கட்சிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.


சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் 2019ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் சரியானது என்பதை உறுதி செய்து அமலாக்கப்பிரிவுக்கு அதிகமான அதிகாரம் வழங்கி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு அபாயகரமானது என்று எதிர்க்கட்சிகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் சேர்ந்து கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

5g spectrum india: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய ஊழல்: கொளுத்திப் போட்ட திமுக எம்.பி. அ.ராசா

கடந்த மாதம் 27ம் தேதி உச்ச நீதிமன்றம் அமலாக்கப்பிரிவு அதிகாரங்களுக்கு வழங்கியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 250 மனுக்கள் மீதான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, “ அமலாக்கப்பிரிவு சட்டவிரோதப் பணப்பரிமாற்றச்சட்டத்தின் கீழ் கைது செய்யவோ, சொத்துக்களை முடக்கவோ, ப றிமுதல் செய்யவோ அதிகாரம் உண்டு “ என்று உறுதி செய்தது.

அதேசமயம், கைது செய்வதற்கான அதிகாரம் வழங்கியதற்கு எதிரான மனுக்களை நிராகரித்தது.
அமலாக்கப்பிரிவுக்கு அதிகமான அதிகாரம் வழங்கியது குறித்து ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மத்திய விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டுகின்றன.

 

17 Opposition parties, including TMC & AAP, plus one independent Rajya Sabha MP, have signed a joint statement expressing deep apprehensions on long-term implications of the recent Supreme Court judgement upholding amendments to PMLA,2002 and called for its review. The statement: pic.twitter.com/vmhtxRHAnl

— Jairam Ramesh (@Jairam_Ramesh)

மத்திய அரசு மாநிலங்களவையில் அளித்த தகவலில் “ நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்தபின், அமலாக்கப்பிரிவு ரெய்டு 26 மடங்கு அதிகரித்துள்ளது. 3ஆயிரத்துக்கும் மேலான சோதனைகள் நடந்துள்ளன, 23 பேர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.. அடித்து சொல்லும் கர்நாடக ஆசிரமத்தின் ஐதீகம் - ஒர்க்அவுட் ஆகுமா ?
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அமலாக்கப் பிரிவு விசாரித்தது, பழிவாங்கும் முயற்சி என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.


அமலாக்கப்பிரிவுக்கு அதிக அதிகாரம் வழங்கி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட திருத்த மசோதா நிதி மசோதாவாக தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.


இந்நிலையில் 17 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில்  “ இந்த ஆபத்தான, அபாயகரமான தீர்ப்பு குறைந்த நாட்களுக்குத்தான் இருக்கும் என நம்புகிறோம்.அரசியலமைப்பு விதிகள் விரைவில் நடைமுறைக்குவரும்.

ஒருவேளை சட்டத்திருத்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து, நிதி மசோதாவாகத் தாக்கல் செய்தது மோசமானது என்று கூறினால், ஒட்டுமொத்த நீதிபரிபாலன முறையும், நீதிமன்ற நேரமும் வீணாகும்.

national herald case:காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கப்பிரிவு திடீர் ரெய்டு

நிதி மசோதா என்பது, அரசின் செலவுகளுக்கும், வரிக்கும் மட்டும் பயன்படுத்தக்கூடியது. இதை சட்டம் இயற்றுவதற்கும், மற்ற அம்சங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. நம்முடைய உச்ச நீதிமன்றத்தின் மீது உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம். அதேநேரம், உச்ச நீதிமன்றத்தின் அதிக நீதிபதிகள் அமர்வு  நிதி மசோதா மூலம் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது சரியானதா என்பதை ஆய்வு செய்து அளிக்கும் முடிவுக்கு காத்திருக்கிறோம்.


சட்டத்திருத்தங்கள் அரசின் கரங்களை வலுவாக்கும் குறிப்பாக அரசியல் பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். கொடூரமான சட்டத்திருத்தங்களுக்கு ஆதரவாக, வழங்கப்பட்ட ஆதாரங்களை அளித்ததை நீதிமன்றம் ஏற்றது வேதனையாக இருக்கிறது


இவ்வாறு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன


 

click me!