monkeypox:குரங்கு அம்மை வராமல் தடுப்பது எப்படி? செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன? மத்திய அரசு விளக்கம்

By Pothy Raj  |  First Published Aug 3, 2022, 2:58 PM IST

நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும்நிலையில், அதைத் தடுப்பதற்கான வழிகள், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.


நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும்நிலையில், அதைத் தடுப்பதற்கான வழிகள், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

Tap to resize

Latest Videos

யாருக்கு குரங்கு அம்மை வரும்?

 “குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி, அடிக்கடி பழகுவோர், தொடர்பில் இருப்போர் யாருக்கு வேண்டுமானும் தொற்று ஏற்படலாம்”

விமானத்தில் மீது கார் மோதி விபத்து… டெல்லி விமான நிலையத்தில் உச்சக்கட்ட பரபரப்பு!!

குரங்கு அம்மை வந்தால் செய்ய வேண்டியவை:

1.    குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தால், அவரை உடனடியாகத் தனிமைப்படுத்த வேண்டும். 

2.    குரங்கு அம்மை மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க சானிடைசர் பயன்படுத்தி கைகளைக் கழுவ வேண்டும் அல்லது சோப்பினால் கழுவ வேண்டும். 

3.    முகத்தை நன்றாக முகக்கவசத்தால் மூடிக்கொண்டு, கைகளில் கையுறை அணிந்துதான் நோயாளியிடம் செல்ல வேண்டும். சுற்றுப்புறங்கள், அறை முழுவதும் சானிடைசர் தெளிக்க வேண்டும்.

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை… பாதிப்பு எண்ணிக்கை 2ஆக உயர்வு… இந்தியாவில் 6ஆக உயர்ந்தது பாதிப்பு!

செய்யக்கூடாதவை

1.    நோயாளியின் ஆடைகள், பயன்படுத்திய படுக்கை, போர்வை, துண்டு என எதையும் மற்றவர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. 

2.    நோயாளிகள் பயன்படுத்திய ஆடைகளை சாதாரணமாக துவைக்காமல், அதாவது, நோய் இல்லாதவர்கள் துணியுடன் சேர்த்து துவைக்காமல் தணியாக துவைக்க வேண்டும். 

3.    குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும், பொதுநிகழ்ச்சிக்கும் செல்லக்கூடாது.

4.    வாட்ஸ்அப், வதந்திகள் மூலம் வரும் தவறான தகவல்களை நம்பிக்கைக் கொண்டு நோயாளிகளை ஒதுக்கி வைக்கக்கூடாது.

இறந்தவர்களுக்காக நடக்கும் ‘பிரேதத் திருமணம்’: கர்நாடகாவில் எப்படி நடக்கிறது? விரிவான விளக்கம்
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை பரவலைக் கண்காணிக்க மத்திய அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு நோய் பரவல், தடுப்புமுறைகளை கண்காணித்து வருகிறது.

உலக சுகாதாரஅமைப்பு குரங்கு அம்மையை உலகளாவிய பொது அவசரநிலையாகஅறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் என்பது ஒரு வைரஸ். விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும். அம்மை நோய்க்கு இருக்கும் அதே அறிகுறிகள்தான் குரங்கு அம்மைக்கும் இருக்கும். 

காய்ச்சல், உடல் அரிப்பு, வீக்கம், கொப்புளங்கள் போன்றவை வரும். அந்த நேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனையை நாடுவது சிறப்பாகும். இந்த நோய் வந்துவிட்டால் 4வாரங்கள்வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

குரங்கு நோய் வந்தால் எப்படி பாதுகாப்பாக இருப்பது, வராமல் தடுப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்கெனவே குரங்கு அம்மை நோய் மேலாண்மை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!