10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 13 பேரை காவு வாங்கிய பெய் மழை.. 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

By vinoth kumar  |  First Published Aug 3, 2022, 12:50 PM IST

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக மழை இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
 
கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக மழை இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- விடாது ஊற்றும் கனமழை.. நிரம்பி வழியும் அணைகள்.. தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!

இந்நிலையில், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 10 மாவட்டகளுக்கு ரெட் அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா போன்ற மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 2 நாட்களில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளா, மகாத்மா காந்தி, காலடி உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இன்று நடைபெற இருந்த தேர்வை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 4 குழுவினர் கேரளாவுக்கு விரைந்துள்ளனர். 

இதையும் படிங்க;-  கனமழை எச்சரிக்கை - நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !!

click me!