gas leak: andhra pradesh: ஆந்திரப் பிரசேதம் ரசாயன வாயு கசிவு:100 தொழிலாளர்கள் வரை மருத்துவமனையில் அனுமதி

By Pothy RajFirst Published Aug 3, 2022, 12:35 PM IST
Highlights

ஆந்திரப் பிரதேச மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், அச்சுதாபுரத்தில் தொழிற்சாலை ஒன்றிலிருந்து ரசாயன வாயு கசிந்ததால், அதை சுவாசித்த ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், அச்சுதாபுரத்தில் தொழிற்சாலை ஒன்றிலிருந்து ரசாயன வாயு கசிந்ததால், அதை சுவாசித்த ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

ஆயத்த ஆடை நிறுவனத்தில் நேற்று இரவு தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த இரவு 7முதல் 7.30 மணிக்குள் திடீரென ரசாயன வாயுக் கசிவு ஏற்பட்டது. 

இந்த தொழிற்சாலையில் பெரும்பாலும் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் ரசாயன வாயுவை சுவாசித்ததால், கண் எரிச்சல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திடீரென சுருண்டு விழுந்தனர்.

மாணவர்களே அலர்ட்!! கல்லூரிகளில் பாதியில் வெளியேறினால் முழு கட்டணமும் திருப்பி கொடுக்கப்படும்.. புது உத்தரவு

இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப்பின் இயல்புநிலைக்கு திரும்பினர். எந்த தொழிலாளரின் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அச்சுதாபுரத்தில் பிராண்டிக்ஸ் இந்தியா அப்பேரல் சிட்டிக்குள், ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்தான் பாதிக்கப்பட்டனர். முதல்கட்ட தகவலில் 17 பேர் மட்டுமே பாதி்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிஐடியூ யூனியன் சார்பில் விடப்பட்ட அறிக்கையில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் பாதி்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்தாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சியா! அப்படி ஏதும் இல்லையே:சீதாராமன் உறுதி

சிஐடியு அமைப்பைச் சேர்ந்த ஆர் ராமு கூறுகையில் “ 36 பெண்கள் என்டிஆர் மருத்துவமனையிலும், 2 தனியார் மருத்துவமனைகளில் 46க்கும் மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட்டனர்” எனத் தெரிவி்த்தார். ஆனால், போலீஸார் அளித்த தகவலில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது

கடந்த ஜூன் 3ம் தேதி இதேபோன்று ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. அப்போது 200க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விலைவாசி உயர்வு! ரூ.2 லட்சம் மதிப்புள்ள லூயிஸ் விட்டான் பேக்கை மறைத்தாரா மஹூவா மொய்த்ரா?

அந்த நேரத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஆகியோர் வந்து தொழிற்சாலையைப் பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அனகாபள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதமி சாலியும் தொழிறச்சாலையை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

click me!