மாணவர்களே அலர்ட்!! கல்லூரிகளில் பாதியில் வெளியேறினால் முழு கட்டணமும் திருப்பி கொடுக்கப்படும்.. புது உத்தரவு

Published : Aug 03, 2022, 11:44 AM IST
மாணவர்களே அலர்ட்!! கல்லூரிகளில் பாதியில் வெளியேறினால்  முழு கட்டணமும் திருப்பி கொடுக்கப்படும்.. புது உத்தரவு

சுருக்கம்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பாதியில் வெளியேறினால், முழு கட்டணத்தையும் திருப்பி வழங்க வேண்டும் என்றும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. 

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பாதியில் வெளியேறினால், முழு கட்டணத்தையும் திருப்பி வழங்க வேண்டும் என்றும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும்‌ உள்ள கல்லூரிகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதியும், பெற்றோர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க:தென் மேற்கு பருவ மழை தீவிரம்:வைகை, சோத்துப்பாறை அணை திறப்பு..! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அதில் பொதுநுழைவுத்‌ தேர்வை எதிர்கொள்ளும்‌ மாணவ, மாணவிகள்‌ முன்னெச்சரிக்கையாக வேறு உயர்கல்வி நிறுவனங்களில்‌ சேர்ந்துள்ளனர்‌. இந்நிலையில் ஏற்கனவே கல்லூரிகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகங்களில்‌ சேர்ந்துள்ள மாணவர்கள்‌ அக்டோபர்‌ 31 ஆம்‌ தேதிக்குள்‌ பாதியிலேயே வெளியேறினால், அவர்கள்‌ செலுத்திய 100% கட்டணத்தையும்‌ திருப்பித்தர வேண்டும்‌ என்று கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அது போல், மாணவர்களின்‌ சேர்க்கையை ரத்து செய்தால்‌ அவர்கள்‌ செலுத்திய அனைத்து கட்டணத்தையும்‌ முழுவதுமாக திருப்பி அளிக்க வேண்டும்‌ என்றும்  சேர்கையை ரத்து செய்வதற்காக தனியாக கட்டணம்‌ எதுவும்‌ வசூலிக்கக்‌
கூடாது என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை சேர்க்கைகளை ரத்துசெய்தால்‌, குறிப்பிட்ட மாணவர்களிடமிருந்து வசூலித்த முழுக்‌ கட்டணத்தில்‌ செயலாக்கக்‌ கட்டணமாக ரூ. 1000-க்கு மேல்‌ கழித்துக்கொண்டு மீதத்‌ தொகையை முழுமையாகத்‌ திருப்பித்‌ தர வேண்டும்‌ எனவும் உத்தரவிடப்பட்டுள்ளாது. 

மேலும் படிக்க:விடாது ஊற்றும் கனமழை.. நிரம்பி வழியும் அணைகள்.. தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!

இதுதொடர்பான வழிமுறைகளை உறுதிசெய்யுமாறு அனைத்து கல்லூரி மற்றும்‌ பல்கலைக்கழகங்களையும்‌ யுஜிசி கேட்டுக்‌ கொண்டுள்ளது. முன்னதாக, மாணவர்கள்‌ வேறு கல்லூரிகளில்‌ சேருவதற்காக பாதியில் நின்றால், கல்லூரிகள்‌, பல்கலைக்கழகங்கள்‌ சேர்க்கைக்‌ கட்டணத்தை ரத்து செய்வதற்கு தனியாகக்‌ கட்டணம்‌ வசூலித்ததாக புகார் எழுந்த நிலையில் தற்போது யுசிஜி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!